8 நாடுகளின் புதிய தூதுவர்கள் நேற்று கடமையேற்பு
இலங்கைக்காக எட்டு நாடுகள் புதிதாக நியமித்திருக்கும் இராஜதந்திரிகள் தங்களது நியமனக் கடிதங்களை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களிடம் நேற்று கையளித்தனர்.ஜனாதிபதி செயலகத்தில் நேற்று காலையில் நடைபெற்ற வைபவத்தின் போதே இவர்கள் தங்களது நியமனக் கடிதங்களை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களிடம் வழங்கினர். மாலைதீவு, ஐக்கிய இராச்சியம், செக்குடியரசு, பரகுவே, லாவோஸ், பொஸ்னியா மற்றும் ஹெஸஹோவினா, கஸாகிஸ்தான், ஸ்லோவேனியா ஆகிய எட்டு நாடுகளுமே தங்களது புதிய இராஜதந்திரிகளை இலங்கைக்கு நியமித்திருக்கிறது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply