‘குற்றச் செயல்களை கட்டுப்படுத்த பாதுகாப்பு படைக்கு ஒத்துழையுங்கள்’ யாழ்ப்பாணத்தில் பாதுகாப்பு படையினர் துண்டுப்பிரசுரங்கள்
‘குடாநாட்டில் அதிகரித்து வரும் குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்தும் நோக்குடன் பொது மக்களின் வேண்டுகோளுக்கிணங்க பாதுகாப்புப் படையினர் சில நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதன் போது மக்களுக்கு ஏற்படும் அசெளகரியங்களை பொருட்படுத்தாது பாதுகாப்புப் படையினருக்கு ஒத்துழைப்பு வழங்க பொதுமக்கள் முன்வர வேண்டும்’
இவ்வாறு மின் கம்பங்களில் கட்டப்பட்டுள்ள பனர்கள் மற்றும் துண்டுப் பிரசுரங்களில் குறிப்பிடப் பட்டுள்ளது. ‘உங்கள் பாதுகாப்பிற்காக இராணுவத்தினருக்கு ஒத்துழைப்பை வழங்குங்கள் என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள துண்டுப் பிரசுரத்தில் மேலும் தெரிவித்திருப்பதாவது,
பொதுமக்களின் சுதந்திரத்திற்கு தடைகளை ஏற்படுத்தும் வகையில் மீண்டும் ஆயுதங்களை கையில் ஏந்திய சிலர் பொதுமக்களின் சொத்துக்களை சூறையாடிக்கொண்டும், கப்பங்களை பெற்றுக் கொண்டும் மற்றும் உயிர் சேதங்களை ஏற்படுத்திக் கொண்டும் யாழ். குடாநாட்டில் பலவிதமான அநியாயச் செயல்களை மேற்கொண்டு செல்வதாக தெரியவருகிறது.
30 வருட யுத்த காலத்துக்குள் மக்களுக்கு இடையூறுகளை ஏற்படுத்தியது போன்ற பலவிதமான செயல்கள் மீண்டும் மேற்கொள்ளப்படுவதாக பாதுகாப்புப் படையினருக்கு தெரிய வந்துள்ளது. ஆகவே இவ்வாறான செயல்களை மட்டுப்படுத்தி பொதுமக்களுக்கு பூரண பாதுகாப்பை பெற்றுக் கொடுங்கள் என்று யாழ்.
பிரதேசத்தில் சில பெரியவர்கள் கேட்டுக் கொண்ட வேண்டுகோளுக்கு இணங்க யாழ். குடா நாட்டின் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹதுருசிங்க பாதுகாப்புப் பிரிவின் செயற்பாடுகளை அதிகரித்துள்ளார்.
யாழ். குடாநாட்டில் பூரண பாதுகாப்பை ஏற்படுத்தவென சோதனைச் சாவடி, உடனடி பரிசோதனை, நடமாடும் பாதுகாப்பு சேவை, காவல் கடமை மற்றும் நடமாடும் சேவை போன்றன அதிகரிக்கப்பட்டுள்ளன. அங்கு வாழும் மக்களுக்கு பூரண பாதுகாப்பை வழங்குவதற்கு இந்நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இவ்வாறான செயல்களை தடுப்பதற்கு பாதுகாப்பு பிரிவினருக்கு ஒத்துழைப்பு வழங்குவது பொதுமக்களாகிய உங்களின் கடமையாகும். இதற்காக தரைப்படையினர் மற்றும் பொலிஸ் புலனாய்வு பிரிவினர் எல்லாப் பிரதேசங்களிலும் சுற்றிவளைப் புகளை அதிகரித்துள்ளதோடு, இவ்வாறான அனியாயச் செயல்களை மிகவும் குறுகிய காலத்திற்குள் அடியோடு இல்லாதொழிப் பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளனர். இராணுவத்தின் யாழ். தலைமையகத்தின் கீழுள்ள தங்கள் பணிகளை ஆரம்பித்துள் ளனர்.
இச்சமயம் இன்னல்களுக்கு முகம் கொடுக்க நேரிட்டால் பொது மக்களின் நன்மை கருதி அதைக் கவனியாமல் பூரண ஒத்துழைப்பை பாதுகாப்பு பிரிவினருக்கு பெற்றுக் கொடுங்கள் என்று பொதுமக்க ளிடம் மிகவும் பணிவுடன் கேட்டுக் கொள்வதோடு, தாமதம் மற்றும் இடையூறுகளுக்கு மேலாக பாதுகாப்பிற்கு முதலிடத்தை கொடுத்து தங்கள் உயிரைப் போன்று மற்றவர்களின் உயிர், சொத்துக்களை பாது காப்பதற்கு ஒத்துழைப்பை வழங்குங்கள் என பாதுகாப்பு படையினர் பொதுமக்களிடம் கேட்டுள்ளனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply