பெளத்த நாடுகள் ஒத்துழைப்புடன் செயற்பட வேண்டியது அவசியம் : ஜனாதிபதி
யுத்த பயம் மற்றும் பயங்கரவாதம் இல்லாத உலகமொன்றை உருவாக்குவதற்காக உலகளாவிய ரீதியில் உள்ள பெளத்தர்களும் பெளத்த நாடுகளும் பரஸ்பர ஒத்துழைப்புடன் செயற்பட வேண்டியது அவசியமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் கூறியுள்ளார். கோட்டே கல்யாண சாம ஸ்ரீ தர்ம மகா சங்க சபையினால் அத்துல்கோட்டே மஹிந்த ராமவின் அதிபதி மற்றும் நிபொன் ஸ்ரீலங்கா கல்வி மற்றும் கலாசார கேந்திரத்தின் அதிபதி மீகஸ்தென்ன சந்திரசிரி தேரருக்கு ஸ்ரீ ஜயவர்தனபுர பிரதான சங்கநாயக்கர் பதவி வழங்கல் நிகழ்வு கடந்த 19ஆம் திகதி அலரி மாளிகையில் இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களில் கல்வி பயிலும் 10 ஆயிரத்து 500க்கு மேற்பட்ட மாணவருக்கு நிபொன் கல்வி கேந்திரம் புலமைப்பரிசி ல்களை வழங்கி வருகிறது.
அத்துடன் நாடளாவிய ரீதியில் அமைந்துள்ள 58 வாசிகசாலைகள், 117 கல்வி நிலையங்கள், மற்றும் 117 விகாரைகள் ஆகியவற்றின் அபிவிருத்தி நடவடிக்கைகளிலும் இந்த கேந்திரம் உதவி வழங்கியுள்ளது.
ஜப்பானுக்கும் இலங்கைக்கும் இடையே நிலவும் நட்புறவுக்கு மதத்தொடர்புகளே காரணமென ஜனாதிபதி இங்கு குறிப்பிட்டார். அத்துடன் இலங்கையில் சிறந்த சிறுவர் பரம்பரையொன்றை கட்டியெழுப்ப உதவும் நிப்பொன் கல்வி கேந்திரத்துக்கு மனமுவந்த நன்றியைத் தெரிவிப்பதாகவும் ஜனாதிபதி அங்கு குறிப்பிட்டார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply