விடுதலைப்புலிகள் கோரியதை வழங்க முடியாது : ஜனாதிபதி

அரசியல் தீர்வு குறித்து அரசியல் கட்சிகளுடன் பேசிய போதிலும், விடுதலைப் புலிகள் கோரியவற்றை வழங்க தயாரில்லை என, ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். இது தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் மாத்;திரம் இன்றி, எதிர்வரும் நாட்களில் ஏனைய கட்சிகளுடன் பேசுவதற்கு உத்தேசித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போதும் இரண்டு தடவைகள் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் அரசாங்கம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது.இந்த நிலையில் அடுத்த சுற்று பேச்சுவார்த்தை எதிர்வரும் மார்ச் மாதம் முதலாம் திகதி நடைபெறவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஊடக பிரதானிகளுடன் அலரி மாளிகையில் இன்று நடைபெற்ற சந்திப்பின் போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.தமிழ் தேசிய கூட்டமைப்புடன், குறுங்கால மற்றும் நீண்டகால நோக்கங்களின் அடிப்படையில் தாம் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன் அடிப்படையில் தமிழ் மக்களின் வீடமைப்பு, நீர்பாசனம் மற்றும் போக்குவரத்து சிக்கல் போன்றன குறுங்கால வேலைத்திட்டத்தின் கீழ் கொண்டுவரப்படவுள்ளன

அத்துடன் நீண்டகால நோக்காக, தமிழ் மக்களின் சட்டமுறைத் தேவைகள் மற்றும் அரசியல் யாப்பு குறித்தும், கூட்டமைப்புடன் பேச்சு நடத்துவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.தற்போது ஏற்பட்டுள்ள இந்திய இலங்கை மீனவர்களின் பிரச்சினை குறித்து, ஊடகவியலாளர்கள் இதன் போது கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதில் வழங்கிய அவர், 30 வருடகால யுத்தம் நிறைவடைந்த பின்னர், வடக்கின் கடல் மீன்பிடி நடவடிக்கைகளுக்காக திறந்துவிடப்பட்டதன் பின்னர் இவ்வாறான பிரச்சினைகள் எழுந்துள்ளதாக சுட்டிக்காட்டினார். எவ்வாறாயினும் இந்த பிரச்சினையை தீர்த்துக் கொள்வதற்காக, இலங்கை மற்றும் இந்திய நாடுகள் ஒன்றிணைந்த இரண்டு குழுக்களை உருவாக்கி இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் இந்த பிரச்சினையை பேச்சுவார்த்தைகளின் அடிப்படையில் தீர்வு காண்பதனையே தாம் எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply