யாழ்ப்பாண மக்களை பதிவு செய்யும் நடவடிக்கைக்கு எதிராக த.தே.கூ வழக்குத் தாக்கல்
யாழ்ப்பாண மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களைச் சேர்ந்த மக்களை பதிவு செய்யும் நடவடிக்கைக்கு எதிராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளது. யாழ்ப்பாண, கிளிநொச்சி மக்களை பாதுகாப்பு தரப்பினர் பலவந்தமான முறையில் பதிவு செய்யக் கூடாது என வலியுறுத்தி இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மாவை சேனாதிராஜா, சுரேஸ் பிரேமசந்திரன், அப்பாத்துரை விநாயகமூர்த்தி, சரவணபவன், சிறிதரன் ஆகியோர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளனர்.
பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ, யாழ்ப்பாண கட்டளைத் தளபதி மஹிந்த ஹத்துருசிங்க, இராணுவப் பேச்சாளர் உபய மெதவல, யாழ்ப்பாண அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார் மற்றும் சட்ட மா அதிபர் ஆகியோர் இந்த மனுவில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாண, கிளிநொச்சி மக்களை பலவந்தமான முறையில் பாதுகாப்பு தரப்பினர் பதிவு செய்து வருவதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
பதிவுக் கட்டணமாக 100 ரூபா அறவிடப்படுவதுடன், புகைப்படங்களும் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
சிங்களத்தில் அச்சிடப்பட்ட படிவங்களில் கையொப்பமிடுமாறு யாழ்ப்பாண மக்கள் பலவந்தப்படுத்தப்படுவதாகக் குறிப்பிடப்படுகிறது.
குற்றவாளிகளைப் போன்று குறித்த மக்கள் நடத்தப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply