நீதிக் கட்டமைப்பில் விரைவில் சீர்திருத்தம் : அமைச்சர் ரவூப் ஹக்கீம்
மிக நீண்டகாலமாக வழக்கு விசாரணை நடைபெற்று வருவதால் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வினை வழங்கும் முகமாக நாட்டின் சட்டக் கட்டமைப்பில் புதிய சீர்திருத்தங்களைக் கொண்டுவரவுள்ளதாக நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். கொழும்பு நீதவான் நீதிமன்றின் நீதிபதிகள் சங்கத்தினருக்கான ஓய்வறையை திறந்து வைக்கும் வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் நேற்று இவ்வாறு தெரிவித்தார்.
நாட்டின் நீதிக் கட்டமைப்பில் புதிய சீர்திருத்தங்களை கொண்டுவர தற்போது நடவடிக்கை எடுத்து வருவதாக அவர் கூறியுள்ளார். நிலுவையிலுள்ள வழக்குகளை விசாரணை செய்து முடிக்க நடவடிக்கை எடுப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
இதேவேளை, சில சட்டத்தரணிகள் தங்களது தொழிலுக்கு ஏற்றவாறு செயற்படுவதில்லை என முறைபாடுகள் கிடைத்துள்ளதென இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய பிரமத நீதியரசர் அசோக டி சில்வா தெரிவித்தார்.
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply