விடுவிக்கப்பட்ட பகுதிகளுக்கு அடுத்த மாதம் மின்சாரம்: அரசாங்கம்
வடக்கில் அண்மையில் விடுவிக்கப்பட்ட பகுதிகளுக்கு மின்சாரம் வழங்கப்படவிருப்பதாக எரிசக்தி அமைச்சர் ஜோன் செனவிரட்ன தெரிவித்துள்ளார்.
விடுதலைப் புலிகளிடமிருந்து அரசாங்கப் படைகள் மீட்ட மன்னார்-பூநகரி (A-32) வீதி மற்றும் A-9 வீதி உள்ளிட்ட பகுதிகளுக்கு மின்சாரம் வழங்கப்படவிருப்பதாகவும், மின்சாரம் வழங்கும் திட்டம் எதிர்வரும் ஜனவரி மாதம் 9ஆம் திகதி ஆரம்பிக்கப்படவிருப்பதாகவும் அமைச்சர் கூறினார்.
அண்மையில் விடுவிக்கப்பட்ட மக்களுக்கு நன்மையளிக்கும் நோக்கில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆரம்பித்திருக்கும் ‘வடக்கின் வசந்தம்’ அபிவிருத்தித் திட்டத்தின் ஒரு கட்டமாகவே மின்சாரம் வழங்கும் இந்தத் திட்டமும் உள்ளடக்கப்பட்டிருப்பதாக செனவிரட்ன குறிப்பிட்டார்.
வடபகுதியில் வாழும் 650,000 பேரில் 150,000 பேர் அரசாங்கத்தின் மின்சாரம் வழங்கும் திட்டத்தின் மூலம் நன்மையடைந்திருப்பதாக அவர் தெரிவித்தார்.
இதேவேளை, கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மீட்கப்பட்ட மன்னார் பகுதியில் வீதி அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்பட்டிருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply