லிபியாவிலுள்ள இலங்கையரை திருப்பி அழைக்க விசேட ஏற்பாடு

லிபியாவில் பணியாற்றும் இலங்கையர் களை நாட்டுக்கு அழைத்துவர கப்பலொன்று அனுப்பிவைக்கப்பட்டி ருப்பதாக அமைச்சரவைப் பேச்சாளரும், ஊடகத்துறை அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.லிபியா மற்றும் பஹ்ரைன் ஆகிய நாடுகளில் ஏற்பட்டிருக்கும் குழப்பமான சூழ்நிலையால் பாதிக்கப்பட்டிருக்கும் இலங்கையர்களை இலங்கைக்கு அழைத்து வருவதற்குத் தேவையான கப்பலொன்று அனுப்பிவைக்கப்பட்டிருப்பதாகவும் இந்த விடயம் தொடர்பில் வெளிநாட்டு வேலைவாய்ப்புத்துறை அமைச்சர் டிலான் பெரேரா தொடர்ந்தும் வெளிநாட்டுத் தூதரகங்களுடன் தொடர்பில் இருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

லிபியாவிலுள்ள இலங்கையர்கள் அந்நாட்டு அரசாங்கத்தின் ஊடாக இத்தாலிய எல்லையில் வைத்துக் கையளிக்கப்படுவார்கள் என்றும் அவர்களை அழைத்து வருவதற்கும், அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்வதற்கும் அரசாங்கம் தயாராகவுள்ளது. அங்குள்ள நிலைமைகளை அரசாங்கம் உன்னிப்பாக அவதானித்து வருகிறது என்றும் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல நேற்று கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கூறினார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply