ஜீ.எஸ்.பி வரிச் சலுகை மீள விண்ணப்பிக்கும் திட்டமில்லை இலங்கை

ஐரோப்பிய ஒன்றியத்தினால் வழங்கப்படும் ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகைத் திட்டத்திற்காக மீள விண்ணப்பிக்கும் திட்டமில்லை என இலங்கை அறிவித்துள்ளது. ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகைத் திட்டம் தொடர்பில் மீளவும் விண்ணப்பிக்கப் போவதில்லை என அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்ற உறுப்பினர்களுடனான சந்திப்பின் போது இந்த விடயம் அறிவிக்கப்பட்டுள்ளது. பாராளுமன்றக் கட்டடத் தொகுதியில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.

மனித உரிமை விவகாரங்கள், தொழில் சட்டங்கள் போன்றவற்றின் அடிப்படையில் இலங்கைக்கு வழங்கப்பட்ட ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகைத் திட்டத்தை ஐரோப்பிய ஒன்றியம் நிராகரித்திருந்தது.

மனித உரிமை விவகாரங்களில் அபிவிருத்தி ஏற்பட்டால் மீளவும் வரிச் சலுகைத் திட்டத்தை வழங்கத் தயார் என ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்திருந்தது.

எனினும், ஐரோப்பிய ஒன்றியத்தினால் விதிக்கப்பட்டிருந்த கால அவகாசத்தின் போது இலங்கை உரிய பதிலளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply