யாழ்.பல்கலைக் கழகத்துக்கு விரைவில் பொறியியல் பீடம் : பஷில்
யாழ். பல்கலைக்கழகத்தில் விரைவில் பொறியியல் பீடம் ஆரம்பிக்கப்படும். இது தொடர்பில் ஜனாதிபதி பல நாடுகளுடனும் பேச்சுவார்த்தை நடத்திவருகின்றார் என்று அமைச்சர் பஷில் ராஜபக்ஷ தெரிவித்தார். யாழ். கொக்குவிலில் தொழில்நுட்பவியல் கல்லூரியை திறந்துவைத்து உரையாற்றுகையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
இங்கு தொடர்ந்து அமைச்சர் பசில் ராஜபக்ஷ உரையாற்றுகையில், என்னால் எழுதியாவது தமிழில் பேசு முடியாமைக்கு உண்மையில் மன வேதனை அடைகின்றேன். ஆனாலும் உங்கள் அனைவரினதும் இதயங்களில் நாங்கள் வாழ்கின்றோம் என்பதையிட்டு மகிழ்ச்சியடைகின்றேன்.
மிக முக்கிய இரு கல்வி நிறுவனங்களை உங்களது மண்ணில் திறந்துவைப்பதையிட்டு உளம் மகிழ்கின்றேன். தொழில்நுட்பவியல் கல்லூரியின் நிர்மாணம் குறித்து ஒரு விடயத்தை கூற விரும்புகிறேன்.
அதாவது 2006 ஆம்ஆண்டு முதல் வடக்கில் இருந்து சர்வதேச மற்றும் உள்நாட்டு தொண்டு நிறுவனங்கள் விலகிச் செல்ல ஆரம்பித்தன. சூழ்நிலை அவ்வாறிருந்தது. அப்போது வடக்கு மக்களுக்கு உதவுமாறு பல நாடுகளிடம் ஜனாதிபதி கோரிக்கை விடுத்தார். பதிலுக்கு அதிகமான நாடுகள் பின்வாங்கின.
ஆனால் தென்கொரியா மட்டும் எமக்கிந்த கல்வி நிறுவனத்தை நிர்மாணித்துக் கொடுக்க முன்வந்தது. அப்பணிகள் 2006இல் ஆரம்பிக்கப்பட்டு இப்போது பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. அதற்காக யாழ்ப்பாண மக்கள் சார்பில் தென் கொரியாவுக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன்.
யுத்தம் இடம்பெற்ற காலத்திலும் கல்வி அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் ஜனாதிபதி மறந்து விடவில்லை. நான் ஏன் இதனைச் கூறுகிறேன் என்றால், கடந்த 3 வருடங்களுக்கு முன்னர் இங்கிருந்த நிலைமையை இன்று அதிகமானோர் மறந்துவிட்டனர். யாழ்ப்பாணத்தில் சிலர் மறந்துபோனதை விட, தெற்கிலுள்ள பலரும் இதனை மறந்துவிட்டனர்.
மொறட்டுவைப் பல்கலைக்கழகத்தில் இல்லாத தொழில்நுட்ப வசதிகள், உபகரணங்கள் இந்த தொழில்நுட்பவியல் கல்லூரியில் உள்ளன. அதனை இப்பகுதி இளைஞர், யுவதிகள் சரியாக பயன்படுத்திக் கொள்வார்கள் என்ற நம்பிக்கை எனக்குள்ளது.
நாங்கள் இத்துடன் நின்று விட மாட்டோம். தேசிய தொழிற்பயிற்சி தகுதி நிறுவனமும் குடாநாட்டிற்கு விரைவில் வரப்போகின்றது. அதுமட்டுமல்ல, யாழ். பல்கலைக்கழத்தில் விரைவில் பொறியியல் பீடமொன்றை அமைக்க ஜனாதிபதி திட்டமிட்டு வருகின்றார்.
ஒரு பிரதேசத்தில் இருந்து அதிகளவான மாணவர்கள் பொறியியல் பீடத்திற்கு தெரிவாகின்றார்கள் என்றால் அது யாழ்ப்பாணமாகத்தான் இருக்கும். ஆனால் யாழ். பல்கலைக்கத்தில் பொறியியல் பீடம் இல்லை.
இது தொடர்பாக ஜனாதிபதி பல நாடுகளுடனும் பேசி வருகின்றார். முன்னர் போலல்லாது இவ்வாறான விடயங்களில் உதவுவதற்கு பல நாடுகள் இப்போது முன்வந்துள்ளன. எனவே விரைவில் பொறியியல் பீடம் அமைக்கப்படும் என்றார் .
அமைச்சர் டக்ளஸ் உரை
இங்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உரையாற்றுகையில்,
கடந்த கால யுத்த அழிவினால் நாடு மட்டுமன்றி எமது கல்வியும் பாதிக்கப்பட்டது. யுத்த காலத்தில் கூட ஜனாதிபதி கல்வி அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொணடுவந்தார். இந்த தொழில்நுட்பவியல் கல்லூரி நிர்மாணப் பணிகளும் யுத்த காலத்திலேயே ஆரம்பிக்கப்பட்டன.
அன்று தமிழ் தலைமைகள் சரியான அரசியலை முன்னெடுத்ததால் அழிவுகளைச் சந்தித்தோம். அமைச்சர்கள் இங்கு வரும்போது கறுப்புக் கொடி காட்டிய வரலாறுகள் உள்ளன. ஆனால் இன்று அ“ந்த நிலைமை மாறிவிட்டது.
இலங்கை இந்திய உடன்படிக்கையின் பின்னர் திறமையான அமைச்சர்கள் நியமிக்கப்பட்டதுடன் அவர்கள் அடிக்கடி வடக்கிற்கு வந்து அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொண்டனர். தொடர்ந்தும் இந்நிலைமை நீடித்திருக்க வேண்டும் என்றார்
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply