புலிகளின் சிரேஷ்ட தலைவர்கள் ஒன்றுகூடும் தளங்கள் விமானப் படையால் தாக்கியழிப்பு
புதுக்குடியிருப்பு மற்றும் விஸ்வமடு காட்டுப்பகுதிகளில் புலிகளின் சிரேஷ்ட தலைவர்கள் இரகசியமாக ஒன்றுகூடும் இரு தளங்களை இலக்கு வைத்து விமானப் படையின் ஜெட் ரக விமானங்கள் தாக்குதல்களை நடத்தியுள்ளன.
அதேசமயம், புதுக்குடியிருப்பு பகுதியில் கடற்புலிகளின் தற்கொலை படகுகள் தயாரிக்கும் தொழிற்சாலை, அலம்பில் மற்றும் இர ணைமடு குள பகுதிகளிலுள்ள புலிக ளின் பலமான நிலைகள் மற்றும் ஒன்று கூடும் தளங்களையும் இலக்கு வைத்து விமானப் படையினர் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக விமானப் படைப் பேச்சாளர் விங் கமாண்டர் ஜனக நாணயக்கார தெரிவித்தார்.
நேற்றுக் காலை 8.30 மணி தொடக்கம் பிற்பகல் வரை பல தடவைகள் நடத்தப்பட்ட விமானத் தாக்குதல்களில் புலிகளின் இரகசிய ஒன்றுகூடும் தளங்களும், டிரெக்டர் வண்டி ஒன்றும் நிர்மூலமாக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
விமானப் படைக்குச் சொந்தமான கிபிர், எம். ஐ- 24 மற்றும் ஜெட் ரக போர் விமானங்களைப் பயன்படுத்தி நடத்தப்பட்ட விமானத் தாக்குதல்கள் வெற்றியளித்துள்ளதாகவும் விமானப் படைப் பேச்சாளர் சுட்டிக்காட்டினார்.
முல்லைத்தீவு விஸ்வமடுவுக்கு தென் கிழக்காக அமைந்துள்ள புலிகளின் முக்கிஸ்தர்கள் மறை முகமாக ஒன்றுகூடும் தளத்தை இலக்கு வைத்து நேற்றுக் காலை 8.30 மணியளவில் முதலாவது தாக்குதலை நடத்தி யுள்ளனர்.
முல்லைத்தீவுக்கு தெற்கே 5 கிலோ மீற்றர் தொலைவில் அமைந்துள்ள முல்லைத்தீவு அலம்பில் வீதியிலுள்ள பலமான நிலை களை இலக்குவைத்து காலை 8.45 மணிய ளவில் மற்றுமொரு தாக்குதலை நடத்தி யுள்ளனர். இந்த தாக்குதலின் போதே புலி களின் டிரக்டர் வண்டி ஒன்றும் நிர்மூல மாக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சியை நோக்கி முன்னெறி வரும் இராணுவத்தின் 57வது மற்றும் முதலாவது செயலணியினருக்கு உதவியாக இரணைமடு குளத்திற்கு மேற்கு பகுதியி லுள்ள புலிகளின் நிலைகள் மீது காலை 9.30 மணியளவில் மற்றுமொரு விமானத் தாக்குதலை நடத்தியுள்ளனர்.
புதுக்குடியிருப்புக்கு தென்கிழக்கே ஒன்றரை கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ள கடற்புலிகளின் தற்கொலை படகுகள் தயாரிக்கும் தொழிற்சாலையை இலக்கு வைத்து தாக்குதல் நடத்திய படை யினர் புலிகளின் சிரேஷ்ட தலைவர்கள் இரகசியமாக ஒன்று கூடும் மறைவிடம் ஒன்றையும் தாக்கியழித்துள்ளனர் என்றும் தெரிவித்தார்.
நேற்றுக் காலை தொடக்கம் மேற்கொள் ளப்பட்ட விமானத் தாக்குதல்கள் வெற்றி யளித்துள்ளதாக விமான ஓட்டிகளும், கள முனையிலுள்ள படைப்பிரிவினர்களும் உறுதி செய்துள்ளதாக விமானப் படைப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை, கிளிநொச்சி நல்லநாவற் குளம் பிரதேசத்தையும் பாதுகாப்புப் படை யினர் கைபற்றியுள்ளனர்.
கிளிநொச்சியை நோக்கி முன்னேறி வரும் இராணுவத்தின் 58வது படைப்பிரி வின் முதலாவது செயலணியினர் நல்ல நாவற்குளம் பிரதேசத்தை நேற்றுக் காலை தமது பூரண கட்டுப்பாட்டின் கீழ் கொண் டுவந்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித் தார்.
பரந்தனுக்கு மேற்காகவும், சின்னப்பரந் தனுக்கு கிழக்காகவும் நல்ல நாவற்குளம் அமைந்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். கிளிநொச்சியை நோக்கி முன் னேறிச் செல்லும் படை நடவடிக்கைகளு க்கு இது மிகவும் உதவியாக அமைந்துள் ளதாகவும் பிரிகேடியர் சுட்டிக் காட்டினார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply