தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் முக்கியஸ்தர் சென்னையில் கைது

தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய ஆலோசகர்களில் ஒருவராக செயற்பட்டு வந்த மோகன்ராஜ் (35) நேற்று சென்னையில் வைத்து தமிழகப் பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இவர்,1996 ஆம் ஆண்டு முதல் 2002 ஆண்டு வரையான காலப் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் முக்கிய ஆலோசகராகக் கடமையாற்றி வந்தாரென ஆரம்ப விசாரணகளிலிருந்து தெரிய வருவதாகத் தமிழகப் பொலிசார் இன்று தெரிவித்தனர்.

இலங்கையில் சிங்களப் பெண்ணொருவரைத் திருமணம் செய்து கொண்ட மோகன்ராஜ், அதன் பின்னர் இயக்கத்திலிருந்து ஒதுங்கி கடல் மார்க்கமாக ராமேஸ்வரம் வந்து மண்டபம் அகதி முகாமில் தஞ்சமடைந்தார்.

இந்நிலையில் அங்கிருந்து நேற்று தப்பியோடிய அவர் கும்மிடிபூண்டி அகதி முகாமில் தஞ்சமடைந்த போதே பொலிசாரால் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட மோகன்ராஜ் மேலதிக விசாரணைக்காக கியூ பிரிவு பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply