புலிகளுக்கு ஆயுதச் சேகரிப்பு: முக்கிய நபர் தமிழகத்தில் கைது

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்கு ஆயுதங்கள் மற்றும் வெடி மருந்துகளை விநியோகித்து வந்த முக்கிய நபரொருவரை தமிழ்நாடு பொலிசார் நேற்றுக் (28) கைது செய்தனர்.

இவர் கைது செய்யப்பட்டபோது இவரிடமிருந்து 500 கிலோ கிராம் வெடி பொருட்கள், மூன்று சட்டலைட் தொலைத் தொடர்புச் சாதனங்கள், ரிப்பீட்டர் கைத்துப்பாக்கிகள் மற்றும் பொருட்களையும் பொலிசார் கைப்பற்றியுள்ளனர்.

தமிழ்நாடு, தாம்பரம் பஸ்தரிப்பு நிலையத்தில் வைத்தே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வவுனியாவைச் சேர்ந்த அமிர் அந்தோனி என்பரையே தமிழ்நாடு கியூ பிரிவுப் பொலிசார் கைது செய்தனர்.

ஆயுதங்களையும் வெடி பொருட்களையும் இயக்கத்துக்காகச் சேகரித்து அவற்றினைச் சுவிட்சர்லாந்துக்கு அனுப்பி அங்கிருந்து பொதி செய்யப்பட்டு ராமேஸ்வரம் ஊடாக இலங்கைக்கு அனுப்புமாறு தம்மை தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமை பணித்திருந்ததாக அவர் விசாரணையின் போது தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட பரந்ராமன் கடந்த ஒருவருட காலமாக தனது மனைவியுடன் சென்னையில் தங்கி பயண முகவராகச் செயற்படுகிறார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply