லக்பிம மற்றும் நக்கீரனில் வெளிவந்த பேட்டிகள் எதுவும் பிரபாகரன் வழங்கவில்லை

கொழும்பிலிருந்து வெளிவரும் “லக்பிம” ஆங்கில வார ஏடு கடந்த ஞாயிறு வெளியிட்டிருந்த புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களது பேட்டி, உண்மையில் தன்னாலேயே வழங்கப்பட்டது என்று புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா. நடேசன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, பா.நடேசனை புலிகளின் இணையத்தளம் ஒன்று தொடர்பு கொண்டு கேட்ட போதே அவர் அதனை மறுத்துள்ளதாக செய்திவெளியிட்டுள்ளது.

“லக்பிம” வார ஏட்டுக்கான இந்தப் பேட்டி தன்னால் வழங்கப்பட்ட ஒன்று என்றும், அதனை அவர்கள் வே. பிரபாகரன் அவர்களின் பேட்டியாக வெளியிட்டு விட்டார்கள் எனவும் அவர் தெரிவித்தார். இதேபோன்று, சில மாதங்களுக்கு முன்னர் கூட தமிழ்நாட்டிலிருந்து வெளியாகும் “நக்கீரன்” இதழும், நடேசனால் வழங்கப்பட்ட பேட்டியை, பிரபாகரன் அவர்களின் பேட்டி என வெளியிட்டிருந்தது கவனிக்கத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply