சஜித் – ரணில் குழுக்களிடையே மோதல்

ஐக்கிய தேசிய கட்சியின் ஸ்ரீகொத்தா தலைமை காரியாலயத்தில் தற்போது பதட்ட நிலையேற்பட்டுள்ளது. எதிர்க்கட்சி தலைவர் பலத்த எதிர்புகளின் மத்தியில் கட்சியின் தேசிய அமைப்பாளராக ரவி கருணாநாயக்கவை நியமித்ததை அடுத்தே இப்பதட்ட நிலை ஏற்பட்டுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கடந்த செயற்குழு கூட்டத்தில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாகீர் மாகார் தேசிய அமைப்பாளர் பதவிக்கு ரஞ்சித் மத்தும பண்டாரவின் பெயரை முன்மொழிந்த போது அதனை மற்றுமொரு உறுப்பினர் வழிமொழிந்தார்.
 
இந்நிலையில் ரவி கருணாநாயக்க தேசிய அமைப்பாளராக நியமிக்கப்பட்டதற்கு கட்சிக்கு புதிதாக நியமிக்கப்பட்ட உபதலைவர் சஜித் பிரேமதாச எதிர்ப்பினைத் தெரிவித்துள்ளார்.
 
இந்நிலையில் ரஞ்சித் மத்தும பண்டார, சஜித் பிரேமதாசவின் பக்கம் சார்ந்தவர் எனபதுவும் ரவி கருணாநாயக்க ரணில் பக்கம் சார்தவர் என்னும் அதேவேளையில் கடந்த செயற்குழு கூட்டத்திற்கு ரவி கருணாநாயக்க சமூகமளிக்காமையும் குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply