புலி ஆதரவு அமைப்புக்கள் தமிழ் மக்களை தவறாக வழி நடத்த முயற்சி : பிரதமர் தி. மு. ஜயரட்ன

ஆறாயிரத்துக்கும் அதிகமான முன்னாள் புலி உறுப்பினர்கள் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு சமூகத்தில் இணைக்கப்பட்டுள்ளனர். எஞ்சியவர்கள் இந்த வருட முடிவுக்குள் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு சமூகமயப்படுத்த உள்ளதாக பிரதமர் தி. மு. ஜயரட்ன கூறினார். அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாத காலத்தினால் நீடிப்பது தொடர்பான பிரேரணையை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது:-

வடக்கு, கிழக்கு மாகாணங்களை மீட்டு அங்கு அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன. அதன் பலன்கள் மக்கள் அனுபவிக்க ஆரம்பித்துள்ளனர். சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் சமமாக சுதந்திரக்காற்றை அனுபவித்து வருகின்றனர்.

அண்மையில் புனர்வாழ்வு அளி க்கப்பட்ட 313 முன்னாள் புலி உறுப் பினர்கள் விடுதலை செய்யப்பட்டு சமூகத்தில் இணைக்கப்பட்டனர்.

விடுதலை செய்யப்படும் முன் னாள் புலி உறுப்பினர்களின் செயற் பாடுகள் குறித்து பாதுகாப்பு தரப்பு கண்காணித்துக்கொண்டே இருக்கி றது.

தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிரு ந்த 100 பேர் புனரமைப்புக்காக நீதி மன்றத்தினால் விடுதலை செய்யப்ப ட்டுள்ளனர். சிறைகளில் உள்ள ஏனைய கைதிகளின் நடவடிக்கைகள் குறித்துக் கவனித்து அவர்களையும் புனர்வாழ்வு அளிக்க உள்ளோம்.

புனர்வாழ்வு அளிக்கப்பட்டு சமூகத்தில் இணைக்கப்பட்ட சில முன்னாள் புலி உறுப்பினர்கள் புலி களின் செயற்பாடுகளு டன் தொடர்பு வைத்துள்ளதாக தகவல் கிடைத்துள் ளது.

இவர்கள் கைது செய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளனர்.

கடந்த மாதம் வடக்கு, கிழக்கு மற்றும் தெற்கில் சட்ட விரோத ஆயுதங்கள் மீட்கப்பட்டன. புலிக ளுக்கு உதவிய பலர் கைது செய்யப் பட்டு விசாரிக்கப்படுகின்றனர். விசாரணை முடிவடைந்த பின்னர் நீதிமன்ற செயற்பாடுகள் முன்னெடு க்கப்படும். இதற்கு அவசரகாலச் சட்டம் தேவைப்படுகிறது.

பயங்கரவாதம் முடிவடைந்த போதும் அதன் எச்சசொச்சங்கள் இருக்கவே செய்கின்றன. இவற்றை நிறுத்த வேண்டும்.

புலிகளை யுத்த ரீதியாக தோற் கடித்து 2 வருடங்களாகிறது. ஆனால் புலிகளின் வலையமைப்பு சர்வதேச மட்டத்தில் இயங்குகிறது. இலங் கையில் ஈழ அரசாங்கம் உருவாக்க வும் தமிழ் மக்கள் மத்தியில் ஈழ கருத்துணர்வுகளை பரப்பவும் முயற்சிகள் நடைபெறுகின்றன. வெளி நாட்டு அமைப்புக்கள் நாட்டின் இறைமைக்கு எதிராக செயற்படு கின்றன. உலக தமிழ் பேரவை, பிரித்தானிய தமிழ் பேரவை முக்கி யஸ்தர்கள் வெளிநாட்டு ராஜதந்திரிக ளுடன் பேசி வருகின்றனர். இதன் உள்நோக்கம் என்ன என்று கவனிக்க வேண்டும்.

ருத்ரகுமார் பிரிந்து சென்று நெடிய வன் தரப்புடன் இணைந்துள்ளார். இவை பிரிந்து செயற்பட்டாலும் இவற்றின் நோக்கம் ஒன்றே. சர்வ தேச புலி ஆதரவு அமைப்புகள் இல ங்கையிலுள்ள தமிழ் மக்களை தவறாக வழிநடத்த முயல்கின்றன. தமது இயக்கத்திற்கு புதிய உறுப்பி னர்களை சேர்க்க முயற்சி நடப்ப தாக தகவல் கிடைத்துள்ளது.

உள்நாட்டுப் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் நாட்டில் உள்ள பயங்கரவாதம் மீண்டும் தலைமைதூக்குவதை தடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

முன்னாள் புலி உறுப்பினர்களை புனரமைத்து சமூகமயமாக்குவதன் மூலமே உண்மையான பயன் ஏற்படும். அவசரகால சட்டத்தினால் பொதுமக்களுக்கு எதுவிதப் பாதிப்பும் கிடையாது. மக்கள் அச்சமின்றி வாழும் சூழல் ஏற்பட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply