தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவு திரட்ட மன்மோகன் நாளை கோவை வருகிறார்
தமிழக தேர்தல் பிரசாரத்துக்காக பிரதமர் மன்மோகன் சிங், நாளை கோவை வருகிறார். கொடிசியா வளாகத்தில் நடைபெறும் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் தி.மு.க. கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களுக்காக அவர் ஆதரவு திரட்டுகிறார். தமிழகத்தில் வருகிற 13ம் தேதி 234 தொகுதிக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. 11ம் தேதி மாலை 5 மணியுடன் தேர்தல் பிரசாரம் முடிகிறது. அதனால் தேர்தல் பிரசாரம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.
முதல்வர் கருணாநிதி, துணை முதல்வர் ஸ்டாலின், கூட்டணிக் கட்சித் தலைவர்களான ராமதாஸ், திருமாவளவன், பெஸ்ட் ராமசாமி, காதர் மொய்தீன் ஆகியோர் மாநிலம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்து பிரசாரம் செய்து வருகின்றனர். அதிமுக கூட்டணி சார்பில் ஜெயலலிதா, விஜயகாந்த் ஆகியோரும் பிரசாரம் செய்து வருகின்றனர்.
தி.மு.க. கூட்டணிக்காக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, கடந்த 5ம் தேதி சென்னை, புதுவை ஆகிய இடங்களில் பிரசாரம் செய்தார்.
அவரைத் தொடர்ந்து நேற்று முன்தினம் மற்றும் நேற்று ஆகிய இரு நாட்கள் ஈரோடு, கரூர், காரைக்குடி, விளாத்திகுளம், புதுவை ஆகிய இடங்களில் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி பிரசாரம் செய்து, திமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினர். அதைத் தொடர்ந்து, பிரதமர் மன்மோகன் சிங் கோவையில் கொடிசியா வளாகத்தில் நாளை மாலை 6 மணிக்கு நடைபெறும் பிரமாண்ட பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார்.
நாளை மாலை 5.10 மணிக்கு இந்திய விமானப்படை விமானம் மூலம் திருவனந்தபுரத்தில் இருந்து கோவை வருகிறார். விமான நிலையத்தில் அவருக்கு திமுக கூட்டணிக் கட்சிகளின் சார்பில் சிறப்பாக வரவேற்பு அளிக்கப்படுகிறது. பின் கொடிசியா வளாகத்தில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார். இரவு 7.30 மணிக்கு இந்திய விமானப்படை விமானம் மூலம் டெல்லி புறப்பட்டுச் செல்கிறார்.
பிரதமரின் பயணத்தையொட்டி சென்னையில் இருந்து குண்டு துளைக்காத கார் கோவைக்கு கொண்டு செல்லப்பட்டது. குண்டு துளைக்காத மேடையும் அமைக்கப்பட்டு வருகிறது. பிரதமரின் வருகைக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை கவனிக்கும் எஸ்பிஜி உதவி ஆணையர் கே.எம்.யாதவ், நேற்று காலை கோவை வந்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply