ஐ.தே.க தேசிய அமைப்பாளர் பதவிக்கு ரவி கருணாநாயக்காவை நியமிக்க ரணில் முயற்சி?
ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளர் பதவிக்கு கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்கவை நியமிப்பதற்கு ஐ. தே. க. தலைவர் ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்நியமனம் மே மாதம் 03ம் திகதி நடைபெறவுள்ள கட்சியின் செயற்குழு கூட்டத்தில் இடம்பெற உள்ளதாகவும் அவ்வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றன.
கட்சியின் செயற்குழு கூட்டத்தின் போது கட்சியின் தேசிய அமைப்பாளர் பதவிக்கு மொனராகலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டாரவின் பெயர் முன்மொழியப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ள நிலையிலேயே கட்சி தலைவர் இப்பதவி பொது இணக்கப்பாட்டுடன் மேற்கொள்ளப்படல் வேண்டுமென்ற செயற்குழுக் கூட்டத்தின் போது அதற்கான நியமனத்தைப் பிற்போட்டதாகவும் அந்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. கட்சியின் பதவிகளுக்கு நியமனங்களை மேற்கொள்ளும் போது சஜித் பிரேமதாசவுக்கு சார்பானவர்களுக்கு மாற்றாந்தாய் முறையில் நடத்தப்படுவதாக சஜித் அணியை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர்.
தேசிய அமைப்பாளர் பதவிக்கு ரஞ்சித் மத்தும பண்டாரவை நியமிக்காமையால் கட்சி உட்பூசல்கள் மேலும் அதிகரிப்பதற்கு இடமுண்டென அவ்வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றன.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply