காணாமல் போனவர்கள் தொடர்பில் அரசாங்கம் பதில் சொல்ல வேண்டும்

இலங்கை அரசாங்கம் காணாமல் போனவர்கள் தொடர்பில் பதில் சொல்லியே ஆக வேண்டும் என மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. இலங்கையின் போர்க்குற்றம் மற்றும் உரிமை மீறல்கள் தொடர்பில் நேற்று வெளியான மனித உரிமை கண்காணிப்பக ஆசிய பிரதிநிதி பிரட் அடம்ஸின் அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கைப்படையினரால் கைது செய்யப்பட்ட, கடத்தப்பட்ட ஏராளமான தமிழ் இளைஞர்கள், விடுதலைப் புலிகள் உறுப்பினர்கள் காணாமல் போயுள்ளனர். இவர்களின் பெற்றோர்கள் எல்லோரிடமும் ஏன் இலங்கை அரசிடமும் அதன் நல்லிணக்க ஆணைக்குழுவிடமும் முறையிட்டும் இதுவரை எந்த பயனும் கிடைக்கவில்லை.

ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர் குழு அறிக்கை இந்த மாதம் வெளியாகவுள்ள நிலையில் மனித உரிமை கண்காணிப்பகமும் தனது கருத்தை வெளியிட்டுள்ளது.

விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர்கள் உட்பட 20 பேர் அரச படைகளினால் உயிருடன் பிடிக்கப்பட்டோ, சரணடைந்தோ இருக்கின்றமைக்கான ஆதாரங்கள் தெளிவாக உள்ளன. ஆனால் அவர்கள் இல்லையென அரசாங்கம் கூறுகின்றது.

ஒட்டு மொத்தமாக சரணடைந்த புலிகள் உறுப்பினர் மற்றும் கைது செய்யப்பட்ட, காணாமல் போன தமிழ் இளைஞர்களுக்கு இலங்கை அரசே பதில் கூற வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply