புத்தாண்டை முன்னிட்டு புனர்வாழ்வளிக்கப்பட்ட புலி உறுப்பினர்களை விடுவிக்க முடிவு
தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்கள் பலர் விடுவிக்கப்படவுள்ளதாக புனர்வாழ்வு ஆணையாளர் பிரிகேடியர் சுதந்த ரணசிங்க அறிவித்துள்ளார்.இதற்கமைய திருமணமான 500 பேர் வரை சமூகத்தில் இணையவுள்ளதாக அவர் குறிப்பிட்டார். தற்போது புனர்வாழ்வு நிலையங்களில் சுமார் 4 ஆயிரத்து 800 முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்கள் தங்க வைக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புனர்வாழ்வளிக்கப்படும் முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்களை விரைவில் விடுதலை செய்வதே அரசாங்கத்தின் நோக்கம் எனவும் இது குறித்து பாதுகாப்பு அமைச்சு கூடிய கவனம் செலுத்தி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply