குடிசை வீட்டுக் கலாசாரத்தை சமூகத்தில் அகற்றும் புதிய வீட்டுத் திட்டம்

சிறந்த சூழலைப் போன்று சிறந்தவொரு சமூகத்தையும் கட்டியெழுப்பும் நோக்கத்துடன் குடிசை வீடுகள் கலாசாரத்தை சமூகத்திலிருந்து அகற்றிவிட்டு அனைவருக்கும் நல்ல வீடொன்றைப் பெற்றுத் தரும் திட்டத்தை அரசாங்கம் ஆரம்பித்துள்ளது என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் கூறியுள்ளார். கொழும்பு நகரின் சூழலை மக்களுக்கு ஏற்றவாறு மாற்றியமைப்பதற்கு உரிய பங்களிப்பை வழங்கிய அமைப்புகளின் பிரதிநிதிகளுக்கு ஜனாதிபதி நேற்று  அலரிமாளிகையில் புதுவருட உபசாரம் வழங்கினார்.

பாதுகாப்பு செயலர் கோட்டாபய ராஜபக்ஷவின் யோசனையின் பேரில் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட் டிருந்தது. தொடர்ந்து அங்கு பேசிய ஜனாதிபதி மேலும் கூறியதாவது:-

அனைவருக்கும் வசிப்பதற்கு ஏற்ற சிறப்பான சூழலை கட்டியெழுப்புவதன் மூலம் புத்திக்கூர்மை மிகுந்த நல்ல ஆரோக்கியத்துடன் ஒழுங்கு முறைகளை கடைப்பிடிக்கும் பரம்பரையை கட்டியெழுப்ப முடியும்.

குடிசை வீடுகளில் வசிப்பவர் என்றும் அதேவீடுகளில் வசிக்கக் கூடாது என்பதை இங்கு சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அரசியல் தேவைகளுக்கு அன்றி மக்களின் தேவைகளைக் கருத்திக் கொண்டே அந்த மக்களுக்கு வசிப்பதற்கான மிகவும் சிறந்த சூழலை ஏற்படுத்திக்கொடுக்கும் பொறுப்பை அரசாங்கம் நிறைவேற்றி வருகிறது என்றும் கூறினார்.

இலங்கையின் வரைபடத்துக்கு மேலும் 500 ஏக்கரை சேர்க்கும் வகையில் காலி முகத்திடலை அடுத்த கடற்பகுதியை நிரப்பும் பாரிய வேலைத்திட்டம் எதிர்வரும் நவம்பரில் ஆரம்பிக்கப் படவுள்ளது. அத்திட்டத்தை இரண்டு வருடங்களில் பூர்த்தி செய்வதற்கு எதிர்பார்க்கப்படுகிறது என்றும் ஜனாதிபதி கூறினார்.

அபான்ஸ், வார்ன்ஸ், கெயகிZன் ஆகிய நிறுவனங்களை சேர்ந்த 1700 பேருக்கு மேல் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜே. ஆர். பி. சூரியப்பெரும, துமிந்த சில்வா, திலங்க சுமதிபால, ஆகியோருடன் கொழும்பு நகர சபையின் விசேட ஆணையாளர் ஓமர் காமில், நகர ஆணையாளர் பத்ரானி ஜயவர்தன, கொழும்பு மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அனுர சேனாநாயக்க ஆகியோர் உள்ளிட்ட பலர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply