இலங்கையில் பல்கலை ஆசிரியர் போராட்டம்

சம்பள உயர்வு கோரும் இலங்கை பல்கலைக்கழக ஆசிரியர்கள், தமது கோரிக்கை நிறைவேற்றப்படாவிட்டால், உயர்தர பரிசோதனை விடைத்தாள் திருத்தும் பணிகளை புறக்கணிக்கப் போவதாக எச்சரித்துள்ளனர். கடந்த பல ஆண்டுகளாக தமக்கு சம்பள உயர்வு எதுவும் வழங்கப்படவில்லை என்று கூறும் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம், யுத்தம் முடிந்த பின்னர் சம்பள உயர்வு வழங்கப்படும் என்று அரசாங்கம் உறுதியளித்திருந்ததாகவும், ஆனால் அதன் பின்னரும் எதுவும் நடக்கவில்லை என்றும் குற்றஞ்சாட்டுகின்றது.

இது தொடர்பாக ஜனாதிபதி, உயர்கல்வி அமைச்சர், சம்பள ஆணைக்குழு உட்பட பலதரப்பினரிடமும் பேச்சு நடத்தப்பட்ட போதிலும் தமக்கு எந்தவிதமான பலனும் கிடைக்கவில்லை என்று இலங்கை பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் பொருளாளரான டாக்டர் பவித்ரா கைலாசபதி  கூறினார்.

இதேவேளை, பல்கலைக்கழக ஆசிரியர்கள் கபொத உயர்தர பரீட்சை வினாத்தாள்களை திருத்தும் பணியை பகிஸ்கரிக்கும் பட்சத்தில், அவர்களுக்கு ஆதரவாக தாமும் அந்தப் பணியைப் புறக்கணிப்போம் என்று இலங்கைஆசிரியர் சங்கத்தின் செயலாளரான ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply