பிரிட்டனின் ஓக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் கறுப்பு இன மாணவர்களை கல்விக்காக அனுமதிப்பதில் மோசமாக நடந்துகொண்டிருக்கின்றது
பிரிட்டனின் ஓக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் கறுப்பு இன மாணவர்களை கல்விக்காக அனுமதிப்பதில் மிகவும் மோசமாக நடந்துகொண்டிருப்பதாக பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கமரோன் அவர்கள் கூறிய விவகாரம் ஒன்று இங்கு பெரிதாகியிருக்கிறது. கடந்த வருடத்தில் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் ஒரேயொரு கறுப்பு இன மாணவரை மாத்திரமே அனுமதித்ததாக டேவிட் கமரோன் கூறியதை அடுத்து ஓக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் அதனை கடுமையாக எதிர்த்துள்ளது.
இந்த விடயத்தில் பொதுவான அடிப்படையில் கூறாமல், தான் மிகவும் குறிப்பாக கூறியிருக்க வேண்டும் என்று கமரோன் தற்போது கூறியுள்ளார். டேவிட் கமரோனின் கருத்து, பிழையானது என்றும், மிகவும் தவறாக வழி நடத்தும் ஒன்று என்றும் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் கூறியுள்ளது.
ஒரேயொரு கரீபிய வம்சாவழி கறுப்பு இன பிரிட்டிஷ் மாணவருக்கு 2009 இல் பல்கலைக்கழகம் அனுமதி வழங்கியிருக்கின்ற போதிலும், கறுப்பு இன பின்னணியைக் கொண்ட ஏனைய 41 மாணவர்களுக்கு பல்கலைக்கழகம் அனுமதி வழங்கியிருப்பதுடன், பல்கலைக்கழகத்தின் மொத்த மாணவர்களில் ஐந்தில் ஒரு பகுதியைவிட அதிகமானோர் இனச் சிறுபான்மையினர் என்றும் பல்கலைக்கழகம் கூறியுள்ளது.
பிரதமர் ”கரீபியன்” என்ற பதத்தை சேர்த்துச் சொல்லியிருக்க வேண்டும் என்று ஒப்புக்கொண்டுள்ள பிரதமர் அலுவலக வட்டாரங்கள், ஆனாலும், ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் கறுப்பு இன மாணவர்களை அனுமதிப்பதற்கான கடந்த கால வரலாறு மிகவும் மோசமாகவே இருந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளன.
இந்த முறைமை மாற வேண்டும் என்று கமரோன் பரந்துபட்ட அளவில் கூறியுள்ளார்.
பத்து வருடங்களுக்கு முன்னர் அரசாங்க பள்ளிக்கூடம் ஒன்றில் ”ஏ” சித்தியை பெற்ற ஒரு மாணவனுக்கு அனுமதி மறுக்கப்பட்டமை ஒரு நிச்சயமான ஊழல் என்று அப்போதைய நிதியமைச்சராக இருந்த கோர்டன் பிரவுண் விபரித்திருந்தார். இப்போதும் கூட ஒக்ஸ்போர்ட் பல்கலைக் கழகத்தின் மாணவர் சேர்க்கைக் கொள்கை அரசியலைக் கவரும் ஒன்றாகவே திகழுகிறது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply