உலகின் ஆறாவது செல்வாக்குமிக்க தலைவராக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவு

உலகிலுள்ள மிகவும் செல்வாக்கு மிக்க 100 பேரை உலகின் அதிக பிரபலம் பெற்று விளங்கும் டைம் சஞ்சிகையின் வாசகர்கள் மத்தியில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் ஆறாவது இடத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார். அரசியல் தலைவர்கள், கலைஞர்கள், புத்தமைவாளர்கள், மதத்தலைவர்கள், சான்றோர் மற்றும் நீங்கள் விரும்பும் வீரமிக்கவர் போன்றவர்கள் உலகின் மிகவும் செல்வாக்கு மிக்க மனிதர்களாக விளங்குகிறார்கள். அவர்களில் முன்னணியில் உள்ள நூறு பேரை தெரிவு செய்யும் பொறுப்பை டைம் சஞ்சிகை உலகெங்கிலும் பரந்திருக்கும் தனது இலட்சக் கணக்கான வாசகர்களிடம் விட்டிருந்தது. வாசகர்கள் அளித்த வாக்குகளின் படியே இந்த செல்வாக்கு மிக்க முக்கியஸ்தர்கள் தெரிவு செய்யப்பட்டார்கள். இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 88,069 வாக்குகளைப் பெற்று ஆறாவது இடத்திற்கு தெரிவாகியுள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதியின் துணைவியார் மிச்சல் ஒபாமா 16,460 வாக்குகளைப் பெற்று 30 இடத்திற்கும், உலகின் மிகவும் அதிகாரம் படைத்த மனிதன் என்று கூறப்படும் அமெரிக்காவின் ஜனாதிபதி பதவியை வகிக்கும் பராக் ஒபாமா 8,669 வாக்குகளைப் பெற்று 46வது இடத்திற்கும் வந்திருக்கிறார்.

இலங்கை ஜனாதிபதியைப் பற்றி சில சர்வதேச அமைப்புக்களும், அமெரிக் காவை ஆதரிக்கும் சில நிறுவனங்களும் போலிப் பிரச்சாரங்களை செய்து இலங்கைக்கு அபகீர்த்தியை ஏற்படுத்த எத்தனித்துக் கொண்டிருக்கும் இவ்வேளை யில், சர்வசே புகழ்பெற்ற சஞ்சிகையின் கற்றறிந்த வாசகர்கள் அந்த குற்றச்சாட்டுகளை முற்றாக நிராகரித்து இலங்கை ஜனாதிபதியின் சாதனைகளை மதிப்பீடு செய்து அவருக்கு இந்தளவு பெருந்தொகை வாக்குகளை வழங்கி ஆறாவது நிலைக்கு உயர்த்தியிருப்பது உண்மையிலேயே பாராட்டக்கூடிய விடயமாகும்.

நான் நினைத்தால் உலகின் அரசியல் வரலாற்றையே மாற்றிவிடலாம் என்ற அதிகாரம் கொண்ட அமெரிக்க ஜனாதிபதி பதவியில் இருக்கும் பராக் ஒபாமாவின் தற்போதைய சர்வதேச அரசியல் தலையீட்டை விரும்பாதவர்களும் அவரது செயற்திறனில் நம்பிக்கை இழந்த டைம் சஞ்சிகை வாசகர்களுமே பராக் ஒபாமாவுக்கு தங்கள் வாக்குகளை அளிப்பதில் தயக்கம் காட்டி அவரை 46வது ஸ்தானத்திற்கு தள்ளியிருக்கிறார்கள். 65 வயதான ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் 26 வருடகாலம் இலங்கை அரசாங்கம் எல்.ரி.ரி.ஈ. இயக்கத்துடன் மேற்கொண்டு வந்த யுத்தத்தை 2009ம் ஆண்டு மே மாதம் 18ம் திகதி வெற்றிகரமாக முடிவுக்கு கொண்டுவந்தார். பின்னர் நடந்த ஜனாதிபதித் தேர்தலிலும் வெற்றி வாகை சூடிய மஹிந்த ராஜபக்ஷ அவர் கள் அதையடுத்து நடைபெற்ற பொதுத் தேர்தலிலும் தனது அரசாங்க கட்சிக்கு அடித்தளம் அமைத்து வழிகோலினார்.

இன்று இலங்கையின் பொருளாதாரம் வளர்ச்சிப் பாதையில் முன்னேறிக் கொண்டிருப்பதானால் வெளிநாட்டவர்கள் இலங்கையில் கோடான கோடி டொலர்களை முதலீடு செய்து வருகிறார்கள்.

மியன்மாரில் ஜனாநாயக சுதந்திரத்திற்காக போராடி சுமார் 30 ஆண்டுகாலம் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்த ஆங் சங் சூகி என்ற 65 வயது பெண் அரசியல்வாதி 3,618 வாக்குகளைப் பெற்று 39வது இடத்திற்கு தெரிவு செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவின் மிகவும் பலம்வாய்ந்த தலைவியாக இருக்கும் இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவி சோனியா காந்தி 1,583 வாக்குகளைப் பெற்று 95வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply