தாய் நாட்டுக்காக மின்சார நாற்காலியில் தண்டனை அனுபவிக்கத் தயார் : ஜனாதிபதி
தாய் நாட்டுக்காக மின்சார நாற்காலியில் தண்டனை அனுபவிக்கத் தயார் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.தமிழ் மக்களுக்கு எதிராக அரசாங்கப் படையினர் யுத்தம் மேற்கொள்ளவில்லை எனவும், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராகவே யுத்தம் மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் பேச்சு சுதந்திரம் கிடையாது எனவும், மனித உரிமை மீறப்படுவதாகவும் சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களில் எவ்வித உண்மையும் கிடையாது என அவர் தெரிவித்துள்ளார்.யுத்தம் நடைபெற்ற காலத்தில் எப்படியாக யுத்தத்தை தடுத்து நிறுத்தும் நோக்கில் வந்த பல வெளிநாட்டு சக்திகள் விமான நிலையத்திலேயே திருப்பி அனுப்பி வைக்கப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஐக்கிய நாடுகளின் நிபுணர் குழு சுமத்தியுள்ள குற்றச்சாட்டுக்கள் ஆச்சரியத்தை ஏற்படுத்துவதாக அவர் தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளின் நெருங்கிய உறவினர்கள் கூட இவ்வாறான குற்றச்சாட்டுக்களை முன்வைக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். தாய் நாட்டின் ஒருமைப்பாட்டுக்காகவும், இறைமையை பாதுகாக்கவும் தாம் பயங்கரவாதத்திற்கு எதிராக யுத்தம் மேற்கொண்டதாகவும், அதற்காக எந்தவொரு தண்டனையும் அனுபவிக்கத் தயார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அலரி மாளிகையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். ஐக்கிய நாடுகளின் நிபுணர் குழு அறிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் எதிர்வரும் மே தினம் மாபெரும் ஆர்ப்பாட்டமொன்று நடத்தப்பட உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்த எதிர்ப்பு போராட்டத்திற்கு நாட்டு அனைத்து மக்களும் பூரண ஆதரவளிக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply