ஹொஸ்னி முபாரக்கிற்கு மரண தண்டனை?

எகிப்தின் முன்னாள் ஜனாதிபதி ஹொஸ்னி முபாரக் மீதான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு மரண தண்டனை வழங்கப்படலாம் என தெரியவருகின்றது. முபாரக் சுமார் 40 ஆண்டுகளாக எகிப்தின் ஜனாதிபதியாக ஆட்சியில் இருந்து வந்தார். எனினும் கடந்த ஜனவரி மாதம் அவருக்கு எதிராக அந்நாட்டு மக்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். இதனைத்தொடர்ந்து கடந்த பெப்ரவரி மாதம் அவர் பதவி விலகினார்.

எனினும் அவர் மீது தனது எதிர்ப்பாளர்களை படு கொலைசெய்தமை, ஊழலில் ஈடுபட்டமை உட்பட பல குற்றச்சாட்டுக்கள் உள்ளன. இக்குற்றச்சாட்டுக்களை அந்நாட்டின் தற்போதைய இராணுவ அரசு விசாரித்து வருகின்றது.

இதன்போது விசாரணைக்கு அழைக்கப்பட்ட அவரது மகன்கள் இருவரும் 15 நாட்கள் விசாரணைக்காவலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இவர் மீதான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படுமானால் அவருக்கு மரண தண்டனை வழங்கப்படலாம் என எகிப்தின் அரச சார்பு நாளேடான அல்- அஹராம் செய்திவெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply