அரசாங்கம் ஒரு தீர்க்கமான முடிவினை முன்வைக்க வேண்டும் : TNA

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் அரசாங்கத்துக்குமிடையில் இன விவகாரத் தீர்வு தொடர்பாக நடைபெறும் பேச்சு வார்த்தை மிகவும் சுமுகமாக நடைபெறுவதாகக் கூறுவதில் எவ்வித உண்மையும் இல்லை என்று கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவிக்கின்றார்.

பேச்சு வார்த்தையில் கலந்து கொள்ளும் அரசாங்கத் தரப்பினர் இன விவகாரத்தீர்வு எவ்வித அக்கறையும் இன்றியே பேச்சுவார்த்தையில் கலந்து கொள்கின்றனர்.
அரசாங்கத்தைப் பொறுத்து இன விவகாரத் தீர்வுவிடயத்தில் தீர்வு குறித்த எவ்வித சிந்தனையும் இன்றி இருப்பதையே இது காட்டுகின்றது என்றும் அவர் தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தகவல் தருகையில்,

” ஐக்கிய இலங்கைக்குள் தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை பூர்த்தி செய்யக்கூடிய ஒரு தீர்வையே நாம் நாடி நிற்கின்றோம். ஐக்கிய இலங்கைக்குள் ஒரு தீர்வைத்தர அரசாங்கம் தயாரா என்பது குறித்து அவர்கள் வெளிப்படையாகப் பேசுகின்றார்கள் இல்லை.

பேச்சுவார்த்தையின் போக்கினையும் அரசாங்கத்தரப்பினரின் நடவடிக்கைகளையும் பார்க்கும் போது இழுத்தடிப்பை மேற்கொள்வதையே நோக்கமாகக் கொண்டிருப்பதாகத் தெரிகின்றது.

தொடர்ந்தும் இழுத்தடிப்பதில் பிரயோசனம் இல்லை.

அரசாங்கம் ஒரு தீர்க்கமான முடிவினை முன்வைக்க வேண்டும். இல்லையேல் தொடர்ந்தும் பேச்சுவார்த்தை நடத்துவதில் பயனில்லை” என்றும் அவர் தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply