நிபுணர் குழுவின் அறிக்கை கூட்டமைப்பும் ஆராயும்: த.தே.கூ

யுத்தம் குற்றம் தொடர்பிலான ஐக்கிய நாடுகள் நபையின் அறிக்கை தொடர்பில் முழுமையாக ஆராய்ந்து தெளிவுப்படுத்தப்படும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் நிபுணர் குழுவின் இலங்கை தொடர்பான அறிக்கை குறித்து கருத்து வெளியிடுகையிலேயே கூட்டமைப்பின் பேச்சாளர் சுரேஸ்பிரேமச்சந்திரன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

போர்க்குற்றம் தொடர்பிலான ஐக்கிய நாடுகள் சபையின் முழுமையான அறிக்கை இதுவரையில் வெளியிடப்படவில்லை. அதில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்களும் அறியக் கிடைக்கவில்லை. இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ள விடயங்களில் கூறப்பட்டுள்ள விடயங்களில் இருக்கின்ற உண்மைத்தன்மைகள் குறித்து ஆராய வேண்டியிருக்கின்றது. மேலும் இந்த அறிக்கையில் குறைபாடுகள் இருக்கின்றனவா என்பது குறித்தும் பார்க்க வேண்டும் என்றார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply