பங்களாதேஷில் ஜனாதிபதி மஹிந்தவுக்கு மகத்தான வரவேற்பு

பங்களாதேஷ¤க்கான மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்ட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு டாக்கா ஹஸ்ரத் ஷாஜாலால் சர்வதேச விமான நிலையத்தில் மகத்தான வரவேற்பளிக்கப்பட்டது. பங்களாதேஷ் ஜனாதிபதி சில்லூர் ரஹ்மானினால் மகத்தான வரவேற்ப ளிக்கப்பட்ட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைக் கெளரவிக்கும் வகையில் 21 மரியாதை பீரங்கி வேட்டுக்கள் தீர்க்கப்பட்டதுடன் பாதுகாப்புப் படையினரின் விசேட அணிவகுப்பு மரியாதையும் இடம்பெற்றன.

நேற்று முற்பகல் டாக்கா ஹஸ்ரத் ஷாஜாலால் சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ திருமதி ஷிரந்தி ராஜபக்ஷ ஆகியோர் சிறார்களினால் பூச்செண்டு வழங்கி வரவேற்கப்பட்டனர்.

அதனையடுத்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான தூதுக் குழுவினர் அந்நாட்டின் ஜனாதிபதி. வெளிநாட்டமைச்சர், நிதியமைச்சர், உள்துறை அமைச்சர் உள்ளிட்ட அமைச்சர்கள் முக்கியஸ்தர்களடங்கிய குழுவினரால் வரவேற்கப்பட்டனர்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பங்களாதேஷ் விஜயத்தினை முன்னிட்டு டாக்கா நகர் வீதிகள் இலங்கையின் தேசியக்கொடி மற்றும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உரு வப்படம் பொறிக்கப்பட்ட பதாதைகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. அத்துடன் அதனை அண்டிய பிரதேசமெங்கும் பல த்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள் ளப்பட்டிருந்தன.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர் களுடன் ஜனாதிபதியின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷ, வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ், பாராளுமன்ற உறுப்பினர்களான ஏ. எச். எம். அஸ்வர், சஜின்வாஸ் குணவர்தன, ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க ஆகியோர் இவ்விஜயத்தில் பங்கேற்றுள்ளனர்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹஇனா விற்குமிடையிலான இரு தரப்பு பேச்சு வார்த்தைகள் நேற்று நடைபெற்றன.

அத்துடன் இரு நாடுகளுக்குமிடையில் முக்கியத்துவம் வாய்ந்த இரு தரப்பு உடன்படிக்கைகள் மற்றும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பலவும் நேற்றைய தினம் கைச்சாத்திடப்பட்டன.

அதனையடுத்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான தூதுக் குழுவினருக்கு பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹக்னா இராப்போசனம் வழங்கி கெளரவித்தார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பங்களாதேஷ் விஜயம் தொடர்பான செய்திகளுக்கு பங்களாதேஷ் ஊடகங்கள் முக்கியத்துவம் வழங்கியிருந்தன. இரு நாடுகளுக்குமிடையிலான உறவுகளில் புதிய அத்தியாயம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஊடகங்கள் வர்ணித்திருக்கின்றன.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply