இலங்கையிடம் பாதுகாப்பு கோருகிறது ஐ.நா
ஐக்கிய நாடுகள் அமைப்பின் இலங்கைக் கிளையில் கடமையாற்றி வரும் பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.ஐக்கிய நாடுகளின் நிபுணர் அறிக்கைக்கு எதிராக எதிர்வரும் மே மாதம் பாரிய போராட்டமொன்றை நடத்துமாறு ஜனாதிபதி விடுத்த அழைப்பைத் தொடர்ந்து ஐக்கிய நாடுகள் அமைப்பு இந்த கோரிக்கையை விடுத்துள்ளது.
ஐக்கிய நாடுகளின் பணியாளர்களை பாதுகாக்க வேண்டியது இலங்கை அரசாங்கத்தின் கடமையாகும் என அந்த அமைப்பின் பிரதிப் பேச்சாளர் பர்ஹான் ஹக் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகளின் நிபுணர் அறிக்கையை ஆராயப்பட்டு வருவதாகவும், இந்த வாரத்தில் குறித்த அறிக்கை பகிரங்கப்படுத்தப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை அரசாங்கத்தின் பதிலுக்காக காத்திருக்க போவதில்லை எனவும் அறிக்கை ஆராயப்பட்டப்பட்டதன் பின்னர் முழு அறிக்கையும் பகிரங்கப்படுத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளார். இலங்கை அரசாங்கம் உரிய நேரத்தில் பதிலை அளிக்கும் என எதிர்பார்ப்பதாகவும் இவ்வாறு பதில் கிடைக்கப் பெற்றால் அந்த பதில் அறிக்கையும் ஒரே நேரத்தில் வெளியிடப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். சம்பந்தப்பட்ட நாட்டுடன் அறிக்கையை பகிர்ந்து கொள்வது வழமையான நடைமுறை என அவர் தெரிவித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply