ஐ.நா. அறிக்கை அரசாங்கத்தை குற்றவாளியாக்கியுள்ளது : மனோ கணேசன்

ஐ.நா நிபுணர் குழுவின் அறிக்கை இலங்கை அரசாங்கத்தை குற்றவாளி கூண்டில் நிறுத்தியுள்ளது என்று ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.அவர் மேலும் தெரிவிக்கையில் யுத்த வெற்றியை தமிழ் மக்களுக்கு எதிரான வெற்றியாக முன்னெடுத்து சர்வதேசத்தை பகைத்துக்கொள்வதா அல்லது ஐக்கிய இலங்கைக்குள் தமிழ் மக்களுக்கு சுயாட்சியை வழங்குவதா என்பதை இந்த அரசாங்கம்தான் தீர்மானிக்க வேண்டும்.

ஐ.நா. அறிக்கை முதலாம் குற்றவாளியாக இலங்கை அரசாங்கத்தையும், இரண்டாம் குற்றவாளியாக விடுதலை புலிகளையும், மூன்றாம் குற்றவாளியாக ஐ.நா. அமைப்பையும் அடையாளப்படுத்தியுள்ளது.

இலங்கையில் போர் நடைபெற்ற இறுதி நாட்களில் என்ன நடந்தது என்பது தொடர்பிலே உலகம் கேள்விகளை கேட்க தொடங்கியுள்ளது.

வடகிழக்கிலே வாழும் தமிழ் மக்களின் வாக்குகளை பெற்றுள்ள கூட்டமைப்புடன் அரசாங்கம் இன்று பேச்சுவார்த்தைகள் நடத்துகின்றது. இந்த பேச்சுவார்த்தைகள் விரைவில் தீர்வை நோக்கி செல்லவேண்டும். இதனை தமிழ் மக்கள் எதிர்பார்க்கின்றார்கள் என்று தெரிவித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply