புலிகளுக்கு கடத்தல் செய்த சுவிஸ்வாசி சென்னையில் கைது

புலிகளுக்குத் தொலைத் தொடர்பு சாதனங்களைக் கடத்தத் திட்டமிட்டிருந்த இலங்கையை பிறப்பிடமாக கொண்ட, தற்போது சுவிஸ் வாசியான ஒருவரை சென்னைப் பொலிசார் நேற்றிரவு கைது செய்தனர். 30 வயதான திலீபன் என்ற இந்த நபரிடமிருந்து நவீன ரக சட்டலைட் தொலைத் தொடர்பு சாதனங்களைப் பொலிசார் கைப்பற்றினர். தம்மிடமிருந்த இந்த சாதனங்களை புலிகள் இயக்க உறுப்பினரொருவரிடம் ஒப்படைப்பதற்காக தாம் சென்னை நகருக்கு வந்ததாக அவர் பொலிசாரிடம் தெரிவித்தார். கைது செய்யப்பட்ட இவர் சுவிச்சர்லாந்திலுள்ள பேக்கரி ஒன்றில் வேலை செய்து வருவதாக முதற்கட்ட பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

சில தினங்களுக்கு முன் வவுனியாவைச் சேர்ந்த அமிர் அந்தோனி என்பரை தாம்பரம் பஸ்தரிப்பு நிலையத்தில் வைத்து, தமிழ்நாடு கியூ பிரிவுப் பொலிசார் கைது செய்தனர். இவர் கைது செய்யப்பட்டபோது இவரிடமிருந்து 500 கிலோ கிராம் வெடி பொருட்கள், மூன்று சட்டலைட் தொலைத் தொடர்புச் சாதனங்கள், ரிப்பீட்டர் கைத்துப்பாக்கிகள் மற்றும் பொருட்களையும் பொலிசார் கைப்பற்றியுள்ளனர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply