வன்னியில் சித்திரைப் புத்தாண்டு விழா

இளைஞர்களுக்கான நாளை அமைப்பின் ஏற்பாட்டில் மிகப் பிரமாண்டமான தமிழ், சிங்கள சித்திரைப் புத்தாண்டு விழா 22 ஆம் திகதி முதல் 24 ஆம் திகதி வரை முறையே முல்லைத்தீவு, கிளிநொச்சி, வவுனியா ஆகிய இடங்களில் நடை பெறவுள்ளது. 22 ஆம் திகதி முல்லைத் தீவிலும், 23 ஆம் திகதி கிளிநொச்சியிலும், 24 ஆம் திகதி வவுனியாவிலும் புதுவருட விளையாட்டுப் போட்டிகள் மற்றும் கலை நிகழ்வுகள் நடைபெறும் இறுதி நாளான 24 ஆம் திகதி இரவு வவுனியா நகர சபை மைதானத்தில் உள்ளூர் கலைஞர்கள் பங்குபற்றும் இசை நிகழ்வும் நடைபெறும்.

இந்த வைபவங்களில் இளைஞர்களுக்கான நாளை அமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட இளம் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply