நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதிநிதிகளை சந்திக்கவே த.தே.கூட்டமைப்பினர் சிங்கப்பூர் சென்றனர்

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதிநிதிகளை சந்திக்கவே, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் கடந்த 18 ஆம் திகதி சிங்கப்பூர் சென்றதாக மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் 5 நாடாளுமன்ற உறுப்பினர் விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்களை சந்தித்துள்ளமை குறித்து தன்னிடம் தகவல்கள் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

இலங்கையில் அரசியல் தீர்வை பெற்றுக்கொள்வதற்காக சிங்கப்பூர் செல்வதற்கு தேவையில்லை எனவும் இவர்கள் தனி ஈழத்தை அமைப்பதற்காக உதவிகளை, அணுசரனைகளை பெற்றுக்கொள்ளும் நோக்கில் இந்த பேச்சுவார்த்தையில் கலந்துக்கொண்டுள்ளதாகவும் முரளிதரன் குறிப்பிட்டுள்ளார். எனினும் தாம் அரசியல் தீர்வு தொடர்பாக கலந்துரையாடும் கருத்தரங்கு ஒன்றில் கலந்துக்கொண்டதாகவும் அது அரசசார்பற்ற நிறுவனங்களுடன் இடம்பெற்றதாகவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

கூட்டமைப்பின் செயலாளர் மாவை சேனாதிராஜா உள்ளிட்டோர் கருத்தரங்களில் கலந்துக்கொண்டனர். இந்த நிலையில், இலங்கையில் அரசாங்கத்திற்கும், கூட்டமைப்புக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வரும் நிலையில்,  வெளிநாடு ஒன்றில் இவ்வாறான பேச்சுவார்த்தையில் கலந்துக்கொண்டமையானது ஆபத்தான நிலைமையை தெளிவுப்படுத்துவதாக பிரதிமைச்சர் முரளிதரன் குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் மீண்டும் தமிழ் மக்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்தும் தேவையில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply