பொன்சேகாவின் கூற்று நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தலாம்: வெள்ளைக்கொடி வழக்கில் சட்டத்தரணி எடுத்துரைப்பு

வெள்ளைக்கொடி விவகார வழக்கின் பிரதிவாதியான முன்னாள் இராணுவத்தளபதி சரத்பொன்சேகா தனது கூற்றை இன்று முன்வைப்பதற்கு தயாராகவே இருக்கின்றார். ஆனாலும் நாட்டில் தற்போதுள்ள பதற்றமான சூழலில் அவரது கூற்று குழப்பத்தை ஏற்படுத்தலாம். எனவே நிலைமையை ஆராய்ந்து முடிவெடுக்குமாறு பிரதிவாதியின் சட்டத்தரணி நளீன் லது ஹெட்டி நீதிமன்றத்தில் கோரினார்.

அரச தரப்பில் ஆஜராகியிருந்த பிரதி சொலிசிட்டர் ஜெனரல் பிரதிவாதி சட்டத்தரணியின் கோரிக்கைக்கு எவ்விதமான எதிர்ப்பினையும் தெரிவிக்கவில்லை இதனால் பிரதிவாதியான பொன்சேகா தனது கூற்றை சமர்ப்பிப்பதற்கு கால அவகாசம் வழங்கிய நீதிமன்றம் வழக்கு விசாரணையினை மே மாதம் 04 ஆ ம் திகதிக்கு ஒத்திவைப்பதற்கு நேற்று புதன்கிழமை தீர்மானித்தது.

வெள்ளைக்கொடி விவகார வழக்கில், சாட்சியமளிப்பதற்காக பிரதிவாதியின் தரப்பில் மன்றுக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ள சாட்சியப்பட்டியலில் ஆறாம் சாட்சி முதல் பத்தாம் சாட்சி வரையிலான ஐந்து சாட்சிகளை நேற்று மன்றில் ஆஜராகுமாறு நீதி மன் ற ம் அழைப்பாணை விடுத்திருந்தது. அழைப்பாணை விடுக்கப்பட்டிருந்த ஐந்து சாட்சிகளும் மன்றில் நேற்று ஆஜராகியிருந்த அதேவேளை அழைப்பாணை விடுக்கப்படாத போதிலும் வழக்கின் மற்றுமொரு சாட்சியான ஜனநாயக தேசிய கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமாரதிஸாநாயக்கவும் நீதிமன்றில் ஆஜராகியிருந்தார் அவரது வருகையும் பதிந்துகொள்ளப்பட்டது.

வடக்கில் இறுதிக்கட்ட யுத்தத்தின் போது வெள்ளைக்கொடியுடன் சரணடைவதற்கு வருகைதந்த விடுதலைப்புலிகள் அமைப்பைச்சேர்ந்த முக்கியஸ்தர்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரின் உத்தரவின் பேரில் சுட்டுக்கொல்லப்பட்டதாக முன்னாள் இராணுவத்தளபதி சரத்பொன்சேகா கூறியதாக சண்டே லீடர் பத்திரிகையில் வெளியா ன செய்தி தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் விசாரணை கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நடைபெற்றுவருகிறது.

மேல் நீதிமன்ற நீதிபதி தீபாலி விஜயசுந்தர தலைமையிலான எச்.என்.பி.பி. வராவௌ, சர்பிக் ரஷீன் ஆகிய நீதிபதிகள் குழு முன்னிலையில் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் ட்ரயல் அட்பார் முறையில் நடைபெற்று வரும் வழக்கைபார்வையிடுவதற்கு சட்டக்கல்லூரி மாணவர்கள் உட்பட பெருந்திரளானோர் நேற்று நீதிமன்றத்திற்கு வருகைதந்திருந்தனர்.

வழமையை விடவும் அதிகமானோர் நேற்று மன்றுக்கு வருகைதந்திருந்தமையினால் பலர் மன்றுக்கு வெளியிலேயே காத்திருக்கவேண்டிய நிலைமை ஏற்பட்டிருந்தது. அதேபோல பிரதிவாதியை சுற்றியிருந்த சிறைச்சாலை பாதுகாவலர்களின் எண்ணிக்கையும் அதிகமாகவிருந்தமையை காணக்கூடியதாக இருந்தது.

வெள்ளைக்கொடி விவகார வழக்கில் அரச தரப்பு சாட்சியங்களின் விசாரணைகள் யாவும் மார்ச் மாதம் 7 ஆம் திகதி திங்கட்கிழமை நிறைவடைந்ததாக அறிவிக்கப்பட்டதை அடுத்து மேற்படி வழக்கின் பிரதிவாதியின் தரப்பு தற்போதைக்கு 10 சாட்சியங் களை பெயர் குறிப்பிட்டு அந்த பட்டியலை மார்ச் 9 ஆம் திகதி புதன்கிழமை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது.

பிரதிவாதியின் சாட்சி பட்டியல் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னர் மார்ச் 30 ஆம் திகதியும் ஏப்ரல் 01 ஆம் திகதியும் வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதிலும் வழக்கின் பிரதிவாதியான சரத் பொன்சேகாவிற்கு ஏற்பட்டிருந்த சுகயீனம் காரணமாக அந்த இரு தினங்களும் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவில்லை.

பிரதிவாதியின் சாட்சி பட்டியலின் பிரகாரம் நீதிமன்றத்தினால் அழைப்பாணை விடுக்கப்பட்டிருந்த உயர்நீதிமன்றம் மற்றும் மேல் நீதிமன்றங்களின் பதிவாளர்கள், சுவடிகள் திணைக்களத்தின் பதிவாளர், இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் செயல õ ளர், சண்டே லீடர் பத்திரிகையின் ஊடகவியலாளர் ரஷ்யா விக்ரமதுங்க ஆகியோரும் மற்றுமொரு சாட்சியான அனுரகுமார திஸாநாயக்கவும் மன்றில் ஆ ஜரா கியி ருந் த ன ர்.

வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட வேளையில் எழுந்த பிரதிவாதியின் சட்டத்தரணியான நளீன் லது ஹெட்டி வழக்கின் பிரதிவாதி சாட் சிய மளிப்பதற்கு இன்று தயாராக இருக்கின்றார் என்றாலும் அண்மையில் இட ம்ö பற்ற சம்பவங்கள் தொடர்பில் அவர் தேடியறிவதற்கும் தீர்மானித்துள்ளார். இவ்வாறான நிலையில் அவரது கூற்றானது நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்துவதற்கும் வாய்ப்பிருக்கின்றது என் பத னால் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் மற்றும் நிலைமை தொடர்பில் ஆராய்ந்து கூற்றை முன்வைப்பதற்கு பிரதிவாதிக்கு காலம் தேவைப்படுகின்றது என்று மன்றுக்கு எடுத்தியம்பினார்.

இதனிடையே எழுந்த பிரதி சொலிசிட்டர் ஜெனரல் புவனகே அலுவிஹார பிரதிவாதியின் சட்டத்தரணியினால் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கையை நான் எதிர்க்கவில்லை என்றாலும் அது நிர்வாகத்துடன் தொடர்புடைய விடயமாயின் அதன் நிலைமை தொடர்பில் ஆராய்வதற்கு சந்தர்ப்பம் வழங்கவேண்டும் என நீதிமன்றின் கவனத்திற்கு கொண்டுவந்தார்.

இருதரப்பின் எடுத்துரைப்பு மற்றும் கோரிக்கைகளை அவதானித்த நீதிமன்றம் மேற்படி வழக்கு விசாரணையை மே மாதம் 4 ஆம் திகதி வரை ஒத்திவைத்ததுடன் நீதிமன்றில் இன்று (நேற்று) ஆஜரான சகல சாட்சிகளையும் அன்றைய தினமும் ஆஜராகுமாறும் உத்தரவிட்டது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply