‘இந்தியாவில் பட்டினிச்சாவுகள் ஏன்?’: நீதிமன்றம்

ஒரு பக்கம் உணவு தானியக் கிடங்குகள் நிரம்பி வழியும் நிலையில், இன்னொரு புறம் பட்டினிச் சாவுகளை அரசு தடுக்க முடியாமல் இருப்பது ஏன் என்று இ்ந்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.இந்தியாவில், பொது விநியோகத் திட்டத்தை முறைப்படுத்துவது தொடர்பான மனு மீதான விசாரணையின் போது, நீதிபதிகள் இவ்வாறு கேள்வி எழுப்பினார்கள். இந்த ஆண்டு அமோக விளைச்சல் ஏற்பட்டிருப்பதாகவும், உணவு தானியக் கிடங்குகள் நிரம்பி வழிவதாகவும், இந்தியப் பொருளாதாரம் வலுவாக இருப்பதாகவும் அரசு சொல்கிறது.

தானியக் கிடங்குகள் நிரம்பி வழியும்போது, இன்னொரு பக்கம் மக்கள் பட்டினியால் தவிப்பத்தால் என்ன பயன் இருக்கப் போகிறது? ஒரு நாட்டுக்குள் இரண்டு வகையான இந்தியர்களைக் கொண்டிருக்க முடியாது – என்று நீதிபதி தல்வீர் பண்டாரி, மத்திய அரசின் கூடுதல் சொலிசிடர் ஜெனரல் இந்திரா ஜெய்சிங்கிடம் கேள்வி எழுப்பினார்.

 முன்னதாக, மூத்த வழக்கறிஞர் கொலின் கொன்சால்வஸ் கூறும்போது, ஐ.நா. மன்றத்தின் மில்லேனிய அபிவிருத்திக்கான இலக்குகளுக்கான பிரகடனத்தில் இந்தியாவும் கையெழுத்திட்டிருந்தாலும், நாட்டில் பட்டினிச் சாவுகள் தொடர்வதாக சுட்டிக்காட்டினார்.

பட்டினிச் சாவைத் தடுக்க, கடுமையாக பாதிக்கப்பட்ட 150 மாவட்டங்களுக்கு உடனடியாக உணவுப் பொருட்களை அனுமதிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் அவர் கோரினார். மகாராஷ்டிரம், பிகார், ஒரிஸா போன்ற சில மாநிலங்களில் ஊட்டச்சத்துக் குறைவு பிரச்சினை அதிகரித்து வருகிறது என்று நீதிபதி சுட்டிக்காட்டினார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply