உலகில் செல்வாக்கு மிக்க அரசியல் தலைவர்களுள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு முதலிடம்
சர்வதேச ‘டைம் சஞ்சிகை’ நடாத்திய உலகின் செல்வாக்குமிக்கவரை தெரிவு செய்வதற்கான கருத்துக் கணிப்பின் இறுதிப் பெறுபேறுகளின் பிரகாரம் உலகின் செல்வாக்குமிக்க அரசியல் தலைவராக இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்காக இணையத்தின் ஊடாக வாக்களித்தவர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்து தொண்ணூற்றி நான்காயிரத்து நானூற்றி எழுபத்திஎட்டு (194, 478) பேராவர். இப்பெறுபேறுகளின் பிரகாரம் பொதுவாக உலகில் செல் வாக்குமிக்கவராக பொப்பிசை பாடகர் ரய்ட்ன் என்பவரே முதலிடம் பெறுகிறார்.
உலகில் செல்வாக்குமிக்க 10 பேரின் பட்டியலில் இடம்பெற்றுள்ள ஒரேயொரு அரசியல் தலைவராகவும், தெற்காசியராகவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களே விளங்குகின்றார்.
இக்கருத்துக் கணிப்பில் அரசியல் தலைவர்களான ரஷ்ய பிரதமர் விளாடிமிர் புட்டின் 42 ஆவது இடத்திலும், அமெரிக்க ஜனாதிபதி பராக்ஒபாமா 46 ஆவது இடத்திலும், இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவி சோனியா காந்தி 102 ஆவது இடத்திலும் காணப்படுகின்றனர்.
சர்வதேச டைம் சஞ்சிகை இணையத்தளம் ஊடாக உலகின் செல்வாக்குமிக்க தலைவரை தெரிவு செய்வதற்காக நடாத்திய கருத்துக் கணிப்பு நேற்றுடன் (21) முடிவடைந்தது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply