மறுவாழ்வு திட்டத்தில் 483 புலிகள் விடுதலை

இலங்கையில் அரசின் மறுவாழ்வு திட்டத்தில், அடைத்து வைக்கப்பட்டிருந்த முன்னாள்விடுதலைப் புலிகள், 483 பேர் விடுவிக்கப்பட்டனர்.இலங்கையில், 2009, மே மாதம், விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன்கொல்லப்பட்ட பிறகு, ஏராளமான விடுதலைப் புலிகள், அரசிடம் சரண்அடைந்தனர். 11 ஆயிரம் விடுதலைப் புலிகள், அரசின் மறுவாழ்வு இல்லத்தில் தங்க வைக்கப்பட்டு, தொழிற்பயிற்சிகள் அளிக்கப்பட்டன.

திருந்திய புலிகள், படிப்படியாகவிடுவிக்கப்பட்டுவருகின்றனர். கொழும்பு நகரில் நடந்த விழாவில், சிறைத் துறை அமைச்சர் சந்திரசிரி கஜதீரா கூறியதாவது:வவுனியா முகாமில் அடைக்கப்பட்டிருந்த, 11 ஆயிரம் விடுதலைப்புலிகளில், தற்போது,நான்காயிரம் பேர் மட்டுமே அங்கு உள்ளனர். மற்றவர்களுக்கு தொழிற்பயிற்சி அளிக்கப்பட்டு, விடுவிக்க பட்டுள்ளனர். தற்போது,

483 பேர் விடுவிக்கப்படுகின்றனர்.
ஊழலை கட்டுப்படுத்தும் வகையில்திட்டங்கள் கொண்டுவர அரசு முடிவுநம்நாட்டில் பல மதங்களைச் சேர்ந்தவர்கள் வாழ்ந்தாலும், இவர்களிடையே இனபாகுபாடு மட்டும் இருக்கக்கூடாது. இனபேதம் என்ற கோரமுகம் மீண்டும் எழுந்து விடக்கூடாது. தமிழ் சிங்கள மக்கள், தங்கள் வேறுபாடுகளை மறந்து ஒன்றுபட்டு வாழ வேண்டும்.இவ்வாறு கஜதீரா கூறினார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply