உலக மக்களின் கண்ணீருடன் பாபாவின் உடல் அடக்கம்

புட்டபர்த்தி சாய் பாபா உடல் அரசு மரியாதையுடன் இன்று அடக்கம் செய்யப்பட்டது. லட்சக்கணக்கான பக்தர்கள் சாய்பாபாவுக்கு அஞ்சலி செலுத்தினர்.புட்டபர்த்தி சாய் பாபாவின் இறுதி சடங்கு நிகழ்வுகள் இன்று காலை 9 மணிக்கு ஆரம்பமாகியிருந்தன. இறுதிச் சடங்கில் உறவினர்கள், நிர்வாகிகள் உள்ளிட்ட 650 பேர் மாத்திரமே அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
 
வேத மந்திரங்கள் முழங்க இந்து முறைப்படி சாய்பாபாவின் சகோதரர் மகன் ரத்னாகர் இறுதிச் சடங்குகளை செய்து முடித்தார். அப்போது, பல்வேறு நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீர் சாய்பாபாவின் உடலில் தெளிக்கப்பட்டது.
 
பின்னர் புனித நீர் தெளிக்கப்பட்ட சாய்பாபா உடல் நவரத்தின பெட்டியில் வைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து பிரஷாந்தி நிலையத்தின் சாய் குல்வந்த மண்டபத்தில் அரசு மரியாதையுடன் சாய்பாபா உடல் இன்று அடக்கம் செய்யப்படுகிறது. இறுதிச் சடங்கில் பா.ஜ.க. மூத்த தலைவர் எல்.கே.அத்வானி, ஆந்திர முதலமசை்சர் கிரண்குமார்ரெட்டி, தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
 
இறுதிச் சடங்கில் பொதுமக்கள் அனுமதிக்கப்படாததால் வெளியே இருந்தபடியே லட்சக்கணக்கான பக்தர்கள் சாய்பாபாகவுக்கு கண்ணீர் மல்க விடை கொடுத்தனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply