நடிகர் ரஜினிகாந்த் வைத்தியசாலையில்

நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் ராணா படத்தின் படப்பிடிப்பு இன்று சென்னை ஏ.வி.எம். ஸ்டூடியோவில் நடைபெற்றது. படப்பிடிப்பின் போது அவருக்கு வயிறு கோளாறு மற்றும் மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் அவரை உடனடியாக மயிலாப்பூர் இசபெல்லா மருத்துவ மனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்தனர்.சிகிச்சை பெற்று வரும் ரஜினிகாந்தை முதல்வர் கருணாநிதி நேரில் சந்தித்து உடல் நலம் குறித்து விசாரித்தார்.

மருத்துவரிடம் ரஜினியின் உடல்நிலை குறித்து கலைஞர் விசாரித்தபோது “தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. நாளை அல்லது நாளை மறுதினம் அவர் வீடு திரும்புவார்” என்று தெரி வித்தனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply