அல் கய்தா அமைப்பின் தலைவர் ஒஸாமா பின் லேடன் உயிரிழந்துள்ளார் : சீ.என்.என்
அல் கய்தா இயக்கத்தின் தலைவர் ஒஸாமா பின்லேடன் பாகிஸ்தானின் தலைநகர் இஸ்லாமாபாத்தில் கொல்லப்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி பரக் ஒபாமா உத்தியோகபூர்வமாக சற்று முன்னர் அறிவித்துள்ளார். ஒஸாமா பின்லேடனின் சடலத்தை அமெரிக்க அதிகாரிகள் கைப்பற்றியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
உலகப் பயங்கரவாத்திற்கு எதிராக ஈட்டப்பட்ட வெற்றியாக பின் லேடனின் மரணம் கருதப்பட வேண்டுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார். உலக சமாதானத்தை விரும்பும் அனைவரும் பின் லேடனின் மரணத்தை கொண்டாடுவார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.
2001ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11ம் திகதி வொஷிங்டனின் உலக வர்த்தக மையம் மற்றும் பென்டன் பாதுகாப் மையம் ஆகியவற்றின் மீது தாக்குதல் நடத்தியதன் மூலம் உலகின் கவனம் பின் லாடனின் பக்கம் திரும்பியது. பின் லாடனை உயிருடனோ அல்லது பிணமாகவோ பிடிப்பவர்களுக்கு ஐம்பது மில்லியன் அமெரிக்க டொலர்கள் சன்மானமாக அறிவிக்கப்பட்டிருந்தது.
ஒஸாமாவை கைது செய்து தண்டனை வழங்காது ஓயப் போவதில்லை என அப்போதைய ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ் பகிரங்க சவால் விடுத்திருந்தார்.
அல் கய்தா அமைப்பின் கிளை அமைப்புக்கள் உலகின் பல நாடுகளில் இரகசியமான முறையில் இயங்கி வருவதாக பயங்கரவாதம் தொடர்பான நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
புதிய இஸ்லாமிய இராச்சியமொன்றை கட்டியெழுப்புவதற்காக பின் லாடன் தனது செல்வத்தின் பெரும்பகுதியை செலவிட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. 1990கள் முதலே பின் லேடன் தீவிரவாத தாக்குதல்களுடன் தொடர்புபட்டிருந்ததாகக் குறிப்பிடப்படுகிறது.
1957ம் ஆண்டு சவூதி அரேபியாவில், 52 பிள்ளைகளைக் கொண்ட குடும்பத்தின் 17 ஆவது பிள்ளையாக ஒஸாமா பின் லேடன் பிறந்தார். ஒஸாமா பின் லேடனின் தந்தை மொஹமட் பின் லேடன் யேமனைப் பிறப்பிடமாகக் கொண்டவர் எனவும், சவூதி அரேபியாவில் பாரிய கட்டிட நிர்மாண வியாபாரத்தைக் கொண்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
ஒஸாமாவின் தந்தைக்கும் சவூதி மன்னர் குடும்பத்திற்கும் இடையில் நெருக்கமான உறவு காணப்பட்டது. ஜித்தாவில் கல்வி பயிலும் காலத்திலேயே ஒஸாமா பின் லேடன் மத ரீதியான தீவிர சிந்தைகளை கொண்டிருந்ததாகவும், அவரது விரிவுரையாளர்களில் ஒருவரான பலஸ்தீனத்தைச் சேர்ந்த அப்துல்லா அசாம் அந்த எண்ணத்தை மேலும் வலுப்படுத்தினார்.
ஆப்கானிஸ்தானில் சோவியத் யூனியனின் தலையீட்டை எதிர்த்து போராடும் முஜாகுதீன் கெரில்லாக்களுக்கு ஆதரவு வழங்கும் நோக்கில் அசாம் அமைப்பொன்றை நிறுவினார்.
இந்த அமைப்பின் பிரதான நிதி வழங்குனராக ஒஸாமா பின் லேடன் திகழ்ந்தார்.
அமெரிக்க ஆதரவுடன் சோவியத் யூனியனுக்கு எதிராக ஆப்கானிஸ்தானில் நடைபெற்ற போராட்டங்களில் கலந்து கொள்ளும் நோக்கில் பின் லேடன் தனது 22 வயது வயதில் தன்னார்வ அடிப்படையில் ஆப்கானிஸ்தான் சென்றார்.
முஜாகுதீன் கெரில்லாக்களின் போராட்டத்திற்கு கட்டிட நிர்மானம் உள்ளிட்ட பல்வேறு வழிகளில் ஒத்துழைப்பு வழங்கும் நோக்கில் ஒரு தசாப்த காலம் பின் லேடன் ஆப்கானிஸ்தானில் தங்கியிருந்தார்.
1980களின் கடைக் கூற்றில் ஒஸாமா பின் லேடன் அல் கய்தா அமைப்பை நிறுவினார்.
சோவியத் யூனியனுக்கு எதிராக பேராடும் ஆப்கானிஸ்தானியர்களுக்கு ஆவணங்களை வழங்கும் நோக்கில் இந்த அமைப்பு உருவாக்கப்பட்டது.
1990களில் உலகின் ஏனைய வல்லரசுகளுக்கு எதிராகவும் போராட்டம் நடத்தப்பட வேண்டுமென்ற கொள்கையை பின் லேடன் வலியுறுத்தத் தொடங்கினார்.
1997ம் ஆண்டு சீ.என்.என் ஊடகத்துடன் நடத்திய செவ்வியின் போது அமெரிக்காவிற்கு எதிராக புனிதப் போர் தொடுக்கப் போவதாக பின் லாடன் பகிரங்கமாக அறிவித்தார்.
குவைட்டின் மீது ஈராக் தாக்குதல் நடத்தியமை பின் லேடனின் வாழ்க்கையில் மற்றுமொரு திருப்புமுனையாக அமைந்தது.
ஈராக்கிற்கு எதிராக யுத்தம் மேற்கொள்வதற்கு சவூதி அரேபியாவைப் பயன்படுத்திக் கொள்ள அமெரிக்க முனைப்பு காட்டிய போது பின் லேடன் அதனை கடுமையாக எதிர்தார்.
சவூதி அரேபியாவை பாதுகாப்பதற்கு தமது படையினரை வழங்குவதாக பின் லேடன் அறிவித்தார் எனினும், இந்த உதவியை சவூதி அரேபியா நிராகரித்தது.
அமெரிக்காவை கடுயைமாக விமர்சனம் செய்ததனைத் தொடர்ந்து பின் லேடனும் அவரது சகாக்களும் சவூதி அரேபியாவை விட்டு வெளியேறி, சூடானுக்கு சென்றனர்.
குறிப்பிட்ட காலப்பகுதியில் பின் லேடன் பல்வேறு வர்த்தக நடவடிக்கைகளில் வெற்றிகரமாக ஈடுபட்டிருந்தார்.
அமெரிக்காவிற்கு எதிராக பின் லேடன் செயற்பட்டு வருகின்றமையை அமெரிக்கா அப்போது அறிந்திருக்கவில்லை.
மொகொடோசுவில் அமெரிக்க அமைதி காக்கும் படையினர் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கும் தமக்கும் தொடர்பு இருப்பதாக பின் லேடன் பின்னொரு காலத்தில் அறிவித்திருந்தார்.
இந்தத் தாக்குதலில் 18 அமெரிக்கத் துருப்பினர் கொல்லப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
2001ம் ஆண்டு உலக வர்த்தக மையத்தின் மீது நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலில் ஆறு பேர் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலுடன் ந்;தாடர்பு பட்ட நபர்களில் பின் லேடனின் பெயரும் குறிப்பிடப்பட்டிருந்தது.
பின் லேடனின் குடியுரிமையை சவூதி அரேபியா ரத்து செய்ததுடன், சூடானிலிருந்து வெளியேற்றுமாறு அமெரிக்க பிரயோகித்த அழுத்தம் காரணமாக பின் லேடன் மீண்டும் ஆப்கானிஸ்தானுக்கே சென்றார்.
இந்தக் காலப்பகுதியிலேயே பின் லேடனின அச்சுறுத்தல் தொடர்பில் அமெரிக்கா உணர்ந்து கொள்ளத் தொடங்கியது.
பயங்கரவாதத்திற்கு நிதி வழங்குவோர் பட்டியலில் பின் லேடனின் பெயரை அமெரிக்க அரசாங்கம் இணைத்திருந்தது.
முதலில் அமெரிக்க படையினரை மட்டும் கொலை செய்ய வேண்டுமென அறிவித்த பின் லேடன் பின்னர் அமெரிக்க பொதுமக்களையும் கொலை செய்ய வேண்டுமென வலியுறுத்தினார்.
தன்சானியா, கென்யா ஆகிய நாடுகளில் அமெரிக்கத் தூதரகங்களின் மீது தாக்குதல் நடத்தினார்.
இந்தத் தாக்குதல்களில் 224 பேர் கொல்லப்பட்டதுடன், 4000 பேர் காயமடைந்திருந்தனர்.
இந்தத் தாக்குதல்களின் பின்னணியில் பின் லேடன் செயற்பட்டதாக அமெரிக்க உத்தியோகபூர்வமாக அறிவித்தது.
உலக வர்த்தக மையம் மற்றும் பென்டன் மீது நடத்தப்பட்ட தாக்குதலைத் தொடர்ந்து உலகின் முக்கியமான பயங்கரவாத அமைப்பாக அல் கய்தா கருதப்பட்டது.
அல் கய்தா அமைப்பின் தலைவர் ஒஸாமா பின் லேடன் உயிரிழந்துள்ளார் – சீ.என்.என்.
அல் கய்தா தீவிரவாத அமைப்பின் தலைவர் ஒஸாமா பின் லேடன் உயிரிழந்துள்ளதாக சீ.என்.என் சர்வதேச செய்தி சேவை தகவல் வெளியிட்டுள்ளது. அமெரிக்க அதிகாரிகளின் தகவல்களின் அடிப்படையில் இந்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
ஒஸாமா பின் லேடனின் சடலம் அமெரிக்க அதிகாரிகளிடம் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. அமெரிக்காவின் தேடப்பட்டுவரும் பட்டியலில் ஒஸாமா பின் லேடன் முதல் இடத்தை வகிக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
செப்டம்பர் 11 உலக வர்த்தக மையத் தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு தாக்குதல் சம்பவங்களை பின் லேடன் மேற்கொண்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இஸ்லாமபாத்தில் வைத்து ஒஸாமா பின் லேடன் கொல்லப்பட்டதாக அமெரிக்க புலனாய்வுத் துறை அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர்.
பின் லேடனின் மரணம் தொடர்பில் அமெரிக்க ஜனாதிபதி பரக் ஒபாமா விரைவில் தேசத்திற்கு உரையாற்ற உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. தாக்குதல் நடத்தப்பட்ட விதம் அல்லது கொல்லப்பட்ட முறை தொடர்பில் தகவல் வெளியிடப்படவில்லை.
பின் லேடனுடன் அவரது குடும்ப உறுப்பினர்களும் கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, கடந்த காலங்களில் இணைய ஊடகத்தின் மூலம் ஒஸாமா பின் லேடனின் ஒளி, ஒலி வடிவ செவ்விகள் இடைக்கிடை வெளிவந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. சீ.என்.என். ஊடகத்தின் இந்தத் தகவல்கள் தொடர்பில் அல் கய்தா அமைப்பு எவ்வித பதிலையும் இதுவரையில் வெளியிடவில்லை.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply