ரொபேர்ட் ஓ பிளேக் இன்று காலை கிளிநொச்சி விஜயம்

தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்குப் பொறுப்பான, அமெரிக்க ராஜாங்கத் திணைக்களத் துணைச் செயலர் ரொபேர்ட் ஓ பிளேக் இன்று காலை கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களுக்கு விஜயம் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் மக்கள் மீள்குடியேற்றப்பட்ட பிரதேசங்களைப் பார்வையிட உள்ளதாகவும், அத்துடன் மீள்குடியேற்றப்பட்ட மக்கள் எதிர்நோக்கும் பிரச்சிகைகள் குறித்தும் ரொபேர்ட் ஓ பிளேக் ஆராய உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

தற்சமயம் கிளிநொச்சியில் உள்ள அவர் அமெரிக்க அரசாங்கத்தின் நிதியுதவியுடன் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் கண்ணிவெடி அகற்றல் மற்றும் ஏனைய அபிவிருத்திப் பணிகளையும் பார்வையிடுகின்றார்.

நேற்றிரவு இலங்கையை வந்தடைந்த அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத் துணைச் செயலர் ரொபேர்ட் ஓ பிளேக் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்களுடன் கலந்துரையாடி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply