இத்தாலியிலுள்ள இலங்கையருக்கு பரீட்சையின்றி சாரதி அனுமதிப்பத்திரம்
இலங்கை சாரதிகளுக்கு பரீட்சை எதுவுமின்றி இத்தாலி சாரதி அனு மதிப்பத்திரம் வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதற்காக இத்தாலியுடன் ஒப்பந்தமொன்றில் கைச்சாத் திட அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இதன் மூலம், இலங்கையர்களுக்கு தடையின்றி இத்தாலியில் தொழில் வாய்ப்புப் பெற வாய்ப்பு ஏற்படுமென அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல கூறினார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக மாநாட்டில் கருத்துத் தெரிவித்த அவர், போக்குவரத்து அமைச்சர் குமாரவெல்கம முன்வைத்த அமைச்சரவைப் பத்திரத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியது.
இலங்கை சாரதிகள் இத்தாலி யில் சாரதி அனுமதிப்பத்திரம் பெறு கையில் பரீட்சைக்கு தோற்றாது இத் தாலி சாரதி அனுமதிப்பத்திரம் பெறு வதற்காக இத்தாலியுடன் புரிந்துண ர்வு உடன்படிக்கையில் கைச்சாத் திட தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இத்தாலியில் சுமார் 75 ஆயிரம் இலங்கையர் தொழில் புரிகின்ற னர்.
அங்குள்ள சில தொழில்களுக்கு கார் ஓட்டுவது கட்டாயமாக்கப் பட்டுள்ளது. இதனால், இத்தாலிச் சாரதி அனுமதிப்பத்திரம் பெறுவது இத்தாலியில் தொழில் பெற வசதி யாக அமையும்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply