கனிமொழி- ஜாமீன் குறித்து 20ம் தேதி முடிவு
இரண்டாம் தலைமுறை செல்லிடத் தொலைபேசி அலைக்கற்றை ஒதுக்கீடு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள திமுக நாடாளுமன்ற உறுப்பினரும் கலைஞர் தொலைக்காட்சியின் பங்குதாரருமான கனிமொழிக்கு ஜாமீன் வழங்கப்படுமா என்பது குறித்த தீர்ப்பு வரும் 20-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இன்று சனிக்கிழமை காலை, கனிமொழியும், கலைஞர் தொலைக்காட்சி மேலாண்மை இயக்குநர் ஷரத்குமாரும் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜரானபோது, தீர்ப்பை 20-ம் தேதிக்கு ஒத்திவைப்பதாக நீதிபதி ஓ.பி. சைனி அறிவித்தார்.
கனிமொழி, ஷரத்குமார் உள்பட ஐந்து பேர், அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பான இரண்டாவது குற்றப்பத்திரிக்கையில் சேர்க்கப்பட்டுள்ளார்கள். பிரதான குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள திமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஆ. ராசாவுடன் சேர்ந்து சதித்திட்டத்தில் ஈடுபட்டதாகவும், அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ராசா மூலம் கிடைத்த லஞ்சப்பணம் 200 கோடி ரூபாயை டி.பி. ரியாலிடி நிறுவனம் மூலம் கலைஞர் தொலைக்காட்சிக்கு அவர் பெற்றதாகவும் குற்ற்ம் சாட்டப்பட்டுள்ளது.
அதே நேரத்தில், கனிமொழி சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராம்ஜெத்மலானி, கனிமொழிக்கு இதில் நேரடித் தொடர்பு இல்லை என்றும், அவரை காவலில் வைக்கக் கூடாது என்றும் வாதிட்டார்.
இதுதொடர்பான வாதங்கள் முடிவடைந்து, கனிமொழிக்கும், ஷரத்குமாருக்கும் ஜாமீன் வழங்கலாமா என்பது குறித்த தீர்ப்பு 14-ம் தேதி அளிக்கப்படும் என்று கடந்த 7-ம் தேதி நீதிபதி அறிவித்தார்.
அதன்படி, இன்று காலை நீதிபதியின் முன்பு கனிமொழியும், ஷரத்குமாரும் ஆஜரானார்கள். ஆனால், நீதிபதி அப்போது தீர்ப்பு வழங்கவில்லை. அவர்களுக்கு ஜாமீன் வழங்குவது தொடர்பாக வரும் 2-ம் தேதி முடிவு அறிவிக்கப்படும் என நீதிபதி அறிவித்தார்.
அதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய சிபிஐ வழக்கறிஞர் ஏ.கே. சிங், உத்தரவு தயாராகாததால் ஒத்திவைக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்தார்.
தற்போது, கனிமொழி மற்றும் ஷரத்குமாரை காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிடாவிட்டாலும், அவர்கள் வழக்கு விசாரணைக்காக தினசரி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும். விசாரணை முடிவடையும் வரை நாள் முழுவதும் நீதிமன்றத்தில் இருக்க வேண்டும்.
ஏற்கெனவே, கடந்த 12-ம் தேதிகளில், சென்னையில் உள்ள வருமானவரித்துறை அலுவலகத்தில் ஆஜராக வேண்டியிருந்ததால், 12. 13 ஆகிய இரண்டு நாட்கள் கனிமொழியும், ஷரத்குமாரும் நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து தளர்வு அளித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்பிறகு, அவர்கள் இருவரும் இன்று சனிக்கிழமை நீதிமன்றத்தில் ஆஜரானார்கள்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply