இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரீஸ் இந்தியா செல்கிறார்

இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில் ஐ.நா. செயலாளர் நாயகத்தினால் அமைக்கப்பட்ட நிபுணர் குழு வெளியிட்டுள்ள அறிக்கை தொடர்பில் இந்தியாவின் ஆதரவைப் பெறுவதற்கு இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரீஸ் இந்தியா செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நாளை 16 ஆம் திகதி இந்தியா செல்லும் பீரிஸுடன் இலங்கை வெளிவிவகார அமைச்சின் நடவடிக்கைகளை கண்காணித்துவரும் சஜின் வாஸ் குணவர்த்தனாவும் செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மூன்று நாள் பயணமாக இந்தியா செல்லும் பீரிஸ், இந்திய வெளிவிவகார அமைச்சர் கிருஸ்ணா உட்பட பலரை சந்திப்பார் என தெரிவிக்கப்படுகின்றது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply