மாகாணசபைகளுக்கு காணி மற்றும் காவல்துறை அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் : இந்தியா

மாகாணசபைகளுக்கு காணி மற்றும் கால்துறை அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டுமென இந்தியா வலியுறுத்தியுள்ளது.தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வாக 13ம் திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துமாறு கோரிக்கை விடுத்துள்ளது.இதன் ஓர் கட்டமாகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனா பேச்சுவார்த்தைகளின் போது அரசாங்கம் செனட்சபை முறைமை குறித்து யோசனை முன்வைத்துள்ளது.

எனினும், செனட் சபை யோசனைத் திட்டத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நிராகரித்துள்ளது. 13ம் திருத்தச் சட்ட மூலம் முழுமையாக அமுல்படுத்தப்பட வேண்டும் எனவும், அவ்வாறான ஓர் நிலைமையிலேயே அதிகாரப் பகிர்வு தொடர்பில் கவனம் செலுத்த முடியும் எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.

மாகாணசபைகளுக்கு காணி மற்றும்; காவல்துறை அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டுமென இந்திய இராஜதந்திரிகள், இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்த உள்ளனர். பின் லேடன் கொலையினால் இந்தியா பாகிஸ்தானுக்கு இடையில் ஏற்பட்டுள்ள பதற்ற நிலையினால், இந்திய இராஜதந்திரிகளின் இலங்கை விஜயம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் ஷிவ்சங்கர் மேனன், வெளிவிவகார அமைச்சின் செயலாளர் நிரூபமா ராவ் மற்றும் பாதுகாப்புச் செயலாளர் பிரதீப் குமார் ஆகியோர் கடந்த 13ம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்வார்கள் என அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும், இறுதி நேரத்தில் இந்த விஜயம் ஒத்தி வைக்கப்பட்டது. இதேவேளை, வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் நாளைய தினம் இந்தியாவிற்கு விஜயம் செய்யவுள்ளார்.

நிபுணர் குழு அறிக்கை எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு ஆதரவு திரட்டும் நோக்கில் இந்த விஜயம் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply