புலிகளை தப்ப வைத்த விவகாரம் :நோர்வேயின் பதிலை கேட்கிறது இலங்கை
பன்னிரெண்டுக்கும் மேற்பட்ட விடுதலைப் புலி உறுப்பினர்கள் இலங்கையிலிருந்து தப்பிச் செல்ல உதவிய சம்பவம் தொடர்பில் நோர்வே அரசாங்கத்திடம் இலங்கை விளக்கம் கோரியுள்ளது. கொழும்பிலுள்ள நோர்வே தூதரக அதிகாரிகள் விடுதலைப்புலி உறுப்பினர்கள் இலங்கையை விட்டு வெளியேறுவதற்கு உதவி இருந்ததாக நோர்வேயின் முன்னணி நாளிதழான ஓfடென்பொச்டென் வெளியிட்டுள்ள தகவல் குறித்து விளக்கமளிக்குமாறு இலங்கை அரசாங்கம் நோர்வேயிடம் இராஜதந்திர ரீதியில் வேண்டுகோள் விடுத்துள்ளது.
வெளிவிவகார அமைச்சு நோர்வேயின் ஒஸ்லோ நகரில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் ஊடாக பிரஸ்தாப வேண்டுகோளை நோர்வே அரசாங்கத்துக்குக் கையளித்துள்ளது. நோர்வேயின் சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் இந்த தகவலை ஆதரித்துள்ளதாகவும் அவர் கூறிய கருத்தை மேற்கோள்காட்டி நோர்வே நாளிதழ் வெளியிட்டுள்ள செய்தி தொடர்பில் நோர்வே அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக நோர்வேயில் உள்ள இலங்கைத் தூதரகம் தெரிவித்துள்ளது.
விடுதலைப்புலிகள் 12 பேருக்கு கடவுச் சீட்டுக்களை வழங்கி, அவர்களுக்கு தேவையான விமானச் சீட்டுக்களை தூதரகமே பெற்றுக் கொடுத்திருப்பது மாத்திரமன்றி தூதரக வாகனத்தில் தமது வாகனத்திலே அவர்களை விமான நிலையம் வரை அழைத்து சென்று நோர்வேக்கு அனுப்ப நோர்வே தூதரக அதிகாரிகள் ஏற்பாடு செய்து கொடுத்துள்ளனர் என்று நோர்வே நாளிதழ் நேற்று முன்தினம் செய்தி வெளியிட்டிருந்தது. பிரஸ்தாப தகவல் தொடர்பாகவே இலங்கை அரசாங்கம் நோர்வேயிடம் விளக்கம் கேட்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply