தேசம் ஐக்கியப்பட்டிருக்கும் போது அதற்கெதிரான சகல சூழ்ச்சிகளும் தோற்றுப்போய்விடுவது உறுதி:ஜனாதிபதி புத்தாண்டு வாழ்த்தில் தெரிவிப்பு

தேசம் ஐக்கியப்பட்டிருக்கும் போது அதற்கெதிரான சகல சூழ்ச்சி களும் தோற்றுப்போய்விடுவது உறுதி. பிறந்திருக்கும் புத்தாண்டு நாட்டிற்கு உண்மையான வெற்றி களைச் சேர்க்க வேண்டுமெனப் பிரார்த்திப்பதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தமது புத்தாண்டுச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளதாவது

முன்னெப்போதுமில்லாத வகையில் செழிப்பு, அபிவிருத்தி மற்றும் ஐக்கியம் பற்றிய மிகுந்த எதிர்பார்ப் புகளுடன் புத்தாண்டு பிறந்துள்ளது.

மிகுந்த எதிர்பார்ப்புகளோடு இராணுவ வீரர்கள் முன் னெடுத்துவரும் துணிகரமான நடவடிக்கைகளுக்கு தேசத்தின் நம்பிக்கைகளோடும் நாம் இதுவரை கடந்து வந்த பயணத்தில் எமது நாட்டுக்கும் எமது மக்களுக்கும் நிலையான சமாதானமொன்றும் மிகுந்த பொருமையுடன் எதிர்பார்த்திருந்த உங்கள் எல்லோருக்கும் இது மகிழ்ச்சி யளிக்கக்கூடிய ஒரு விடயம் என்பது எனக்குத் தெரியும்.

எமது தேசம் வெற்றியின் நுழைவாயிலில் நிற்கும் இவ் வேளையில் நாட்டின் எதிர்காலத்தைப் பாதுகாப்பதற்காக நாம் எல்லோரும் ¨க்கியப்படுவது எம் எல்லோரு டையதும் பொறுப்பும் கடமையுமாகும். பல்வேறு வகை யான சவால்களுக்கு முகங்கொடுத்து நாட்டின் அபிவிரு த்தியை சரியான பாதையில் இட்டுச் சென்று மக்களின் வாழ்வில் செழிப்பைக் கொண்டுவருவதற்கான சகல நடவடிக்கைகளையும் எனது அரசாங்கம் மேற்கொண்டுள் ளது.

2009ம் ஆண்டை இராணுவ வீரர்களின் வெற்றியா ண்டாக பிரகடனப்படுத்தியுள்ளதன் முலம் பயங்கரவாத த்திலிருந்து நாட்டை விடுவிப்பதற்காக எமது கெளரவ த்தை வழங்கியுள்ளோம்.

எமது நாடு இதுவரை அடைந்துள்ள வெற்றிகளைப் பார் க்கிலும் எதிர்காலத்தில் மென்மேலும் பாரிய வெற்றிகளை யும் முன்னேற்றங்களையும் அடைந்துகொள்வதற்காக நாம் எமக்கிடையே இருக்கின்ற எல்லா வேறுபாடுகளையும் மறந்து ஒன்றுபட்டு செயற்பட முன்வருமாறு எல்லோ ரையும் அழைக்கின்றேன்.

தேசம் ஐக்கியப்பட்டிருக்கும் போது நாட்டுக்கெதிரான எல்லா சூழ்ச்சிகளும் தோற்றுப் போய்விடும். பிறந்திரு க்கும் புத்தாண்டு தேசத்திற்கு உண்மையான வெற்றிகளைக் கொண்டுவந்து சேர்க்குமாக எனப் பிரார்த்திக்கின்றேன்.

உங்கள் எல்லோருக்கும் எனது மகிழ்ச்சிகரமான புத்தாண்டு வாழ்த்துக்கள் என்றார் ஜனாதிபதி.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply