இலங்கையின் முதல்ப்பெண் பிரதம நீதியரசர் : ஷிரானி
இலங்கையின் 43 வது பிரதம நீதியரசராக சிராணி பண்டாரநாயக்க இன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் சத்திய பிரமாணம் செய்து கொண்டார்.உச்ச நீதிமன்றத்தின் சிரேஷ்ட நீதியரசரான இவர், இலங்கையின் பிரதம நீதியரசர பதவிக்கும் முதல் பெண்மணியாவார்.அநுராதபுரம் மத்திய மகாவித்தியாலயத்தில் கல்வி கற்று பின்னர், கொழும்பிலும் தமது கல்வியைத் தொடர்ந்து, கொழும்பு பல்கலைக்கழகத்தில் சட்டதுறை பீட்த்தில் உள்வாங்கப்பட்டுள்ளார்.அதன்பின் 1980 இல் சட்டத்துறை பட்டத்தையும், 1983 ம் ஆண்டு சட்டம் தொடர்பான முதுமாணி பட்டத்தையும் பெற்றள்ளார்.
அதே வருடத்தில் உச்ச நீதிமன்றத்தின் சட்டத்தரணியாக சத்தியப்பிரமாணம் செய்திருந்தார். நீதிச் சேவை ஆணைக்குழுவின் உறுப்பினரான சிரணி பண்டாரநாயக்க 11 தடவைகள் பதில் பிரதம நீதியரசராக செயற்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply