மேலவை கிடையாது- ஜெயலலிதா
தமிழகத்தில் சட்டமன்ற மேலவையை மீண்டும் உருவாகும் பேச்சுக்கே இடமில்லை என முதல்வர் ஜெயலலிதா தெரிவித்திருக்கிறார்.அ இஅதிமுக நிறுவனர் எம்ஜிஆர் ஆட்சிக் காலத்தில் சட்டமேலவை கலைக்கப்பட்டது. 1996௨001 காலகட்ட்த்தில் சட்டமேலவையை மீண்டும் அமைக்க அன்றைய திமுக அரசு எடுத்த முயற்சிகளை அதன் பின்வந்த அ இஅதிமுக ஆட்சிக்காலத்தில் முறியடிக்கப்பட்டன.
கடந்த திமுக ஆட்சிக்காலத்தில் மேலவை மறுபடி வேண்டும் எனக்கோரி மீண்டும் சட்ட்மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பின்னர் நாடாளுமன்றத்தில் அதற்கான சட்டமும் இயற்றப்பட்டு குடியரசுத்தலைவரின் ஒப்புதலும் பெறப்பட்டிருக்கிறது.
இப்பின்னணியில் செவ்வாய்கிழமை நடந்த ஒரு செய்தியாளர் சந்திப்பில் சட்டமேலவை குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த முதல்வர் ஜெயல்லிதா, எம்.ஜி.ஆரின் முடிவே கட்சியின் கொள்கை என்றார்.
ராஜீவ் கொலை
முன்னாள் பிரதம்ர் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்டதற்கு திமுகவே காரணம் என்றும் ஜெயல்லிதா செய்தியாளர் சந்திப்பில் மீண்டும் குற்றஞ்சாட்டினார்.
விடுதலைப்புலிகளுக்காக ஆயுதங்கள் வாங்கும் பொறுப்பை ஏற்றிருந்தவரும் தற்போது இலங்கை அரசுக்கு மிக நெருக்கமாக இருப்பவருமான கே.பி. என்றழைக்கப்படும் குமரன் பத்மநாதன் தனியார் தொலைக்காட்சி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் ராஜீவ் கொலையை செய்தது விடுதலைப்புலிகள்தான் என்றும் அதற்காக இந்தியர்களிடம் மன்னிப்பு கேட்பதாக்வும் கூறியிருந்தார்.
திராவிட இயக்கத்தின் பிராமண எதிர்ப்புக்கொள்கைகளால் ஈர்க்கப்பட்டதால்தான் வேலுப்பிள்ளை பிரபாகரன் ராஜீவ்காந்தியை கட்டோடு வெறுத்ததாகவும் அதன் இறுதிவிளைவே ராஜீவின் கொலை என்றும் கூறியிருந்தார்.
அது குறித்து நிருபர்கள் கேட்டபோதுதான் ஜெயல்லிதா, “அதிலென்ன புதிதாக இருக்கிறது. நாங்கள்தான் நீண்டநாட்களாகச் சொல்லி வருகிறோமே ராஜீவ்காந்திகொலைக்கு திமுகவே காரணமென்று” என்றார் அவர். கே.பி. விடுதலைப்புலிகள் ஜெயல்லிதாவின் உயிருக்கு குறிவைத்த்தாகவும் ஆனால் அம்முயற்சியில் தோற்றதாகவும் தெரிவித்திருந்தார். அதுவும் எல்லோரும் அறிந்த ஒன்றுதான் என்றும் பல காலமாகவே அப்படி ஓர் ஆபத்துடந்தான் தான் வாழ்ந்துவருவதாகவும் கூறிக்கொண்டார் ஜெயலலிதா.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply